அம்பாந்தோட்டையில் இரண்டு மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அம்பாந்தோட்டை வனவிலங்கு காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றுவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 5 பேரிடமிருந்த இரு மான்களின் இறைச்சி வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் குறித்த பிரதேச வாசிகள் என்பதோடும், அவர்கள் இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.