அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க விமல் - டலஸ் அணியினர் ஒன்றிணைவு

Published By: Digital Desk 5

04 Nov, 2022 | 07:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட விமல் வீரவன்ச அணியினரும்,டலஸ் அழகப்பெரும அணியினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பலமாக சக்தியை உருவாக்கும் நோக்கில் சுதந்திர மக்கள் காங்கிரசும், மேலவை இலங்கை கூட்டணியும் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  (04) இடம்பெற்ற இந்த சந்திப்பில் சுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களான டலஸ் அழகபெரும,ஜி.எல்.பீரிஸ்,டிலான் பெரேரா,நாலக கொடஹேவா,சரித ஹேரத் ஆகியோர், மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பின் தலைவர் விமல் வீரவன்ச,உட்பட வாசுதேவ நாணயக்கார,அதுரலியே ரத்ன தேரர்,உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார நெருக்கடியை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி,நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்தல் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் தான்தோன்றித்தனமாக அரசாங்கம் செயற்படுகிறது.

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தில் அடக்குமுறையை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது வலியுறுத்தினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முறையற்ற நிர்வாகத்தினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் தோற்றம் பெறுவதை தடுக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியமானது என இச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் முறைமை திருத்தம் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகியுள்ள நிலையில் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது.நாட்டு மக்களின் அடிப்படை   வாக்குரிமையை பாதுகாக்க நிச்சயம் நீதிமன்றம் செல்வேன் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நாட்டு மக்களை பலியாகியுள்ளது.இவ்வருடத்திற்குள் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது ஒட்டுமொத்த மக்களும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்வதை தவிர்த்து அரசாங்கத்திடம் வேறு திட்டங்கள் ஏதும் கிடையாது,கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.கடன் மறுசீரமைக்கப்பாவிட்டால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.பொருளாதார மீட்சிக்காக அரசாங்கத்திடம் 10 யோசனைகளை முன்வைத்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது அவசியமானதாகும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51