பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகையை அதிகரிக்க வேண்டாம் – வாசு

Published By: Digital Desk 5

04 Nov, 2022 | 02:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அமைய வேண்டும்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான  காப்புறுதி தொகையை அதிகரிக்க அரசாங்கம் அவதானம்  செலுத்தியுள்ளமை அரசியல்வாதிகள் மீதான மக்களின் வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்வதை தவிர்த்து பொருளாதார மீட்சிக்கான எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கடுமையான வரி விதிப்பு நிபந்தனைகளை தற்போது அமுல்படுத்தியுள்ளது.

வரி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கிறங்கி போராடும் போது அதனை அரசாங்கம் வன்மையான முறையில் அடக்குகிறது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அமைய வேண்டும்.வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஏதேனும் தீர்வு கிடைக்குமா என நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதியை வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் அரசியல்வாதிகள் மீதான மக்கள் வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் மீள் எழுச்சிக்காக ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒருதரப்பினர் சார்பாகவும்,பிறிதொரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சார்பாகவும் செயற்படுகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56