மதிக்க கற்றுக்கொடுங்கள்!

Published By: Devika

04 Nov, 2022 | 12:39 PM
image

தித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மற்றவர்களை மதிப்பது என்பது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். ஒரு தனி நபரை நீங்கள் மதிக்கும்போது உங்கள் மனம் எல்லோரையும் மதிக்கத் தொடங்கிவிடும். 

குழந்தைகள் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கிறார்கள், மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கிறார்கள். எனவே சமுதாயத்தில் சிறியவர்­களுக்கு பெரியவர்களை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் சமுதாயத்தின் விதிமுறைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 

அனைவருடனும் சமமாக பழக சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் மற்ற­வர்களோடு பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது. மற்ற­வர்களை மதிக்கும்போது அது மன நிறைவை ஏற்படுத்து­வதோடு நம்முடைய குறைகளை சொல்லி அதற்­கான தீர்வுகளை பெறுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்­பதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஒரு இனிமையான சூழல் உருவாகுவதற்கும், நம்முடைய வாழ்க்கை பாதை சரி­யான திசையில் செல்வதற்கும், வழி வகுக்கிறது. இப்படி பல நன்மை­களை உருவாக்கும் மதித்தல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது என்பது தெரியவருகிறது. 

குழந்தைகள் தவறு செய்யும்போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும்போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது, தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் “இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய். மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா? தவறா? என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும். இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். 

மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும்போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறிழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும்போது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்­குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்