இம்ரான் கானின் தொடை, கீழ் காலில் சன்னங்களை அகற்றுவதற்கு சத்திரசிகிச்சைகள்

Published By: Sethu

04 Nov, 2022 | 11:15 AM
image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தொடையிலும் கீழ் கால் பகுதியிலும் துப்பாக்கிச் சன்னங்களை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கானை நோக்கி  நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இம்ரான் கான் உட்பட மேலும் 14 பேர்காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக, லாகூரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபத் நோக்கி நீண்ட அணிவகுப்பு எனும் அரசியல் பேரணியை இம்ரான் கானின் பிரிஐ கட்சி நடத்தி வருகிறது

இப்பேரணியின்போதே வஸீராபாத்  நகரில் நேற்று வியாழக்கிழமை  இம்ரான் கான் பயணித்த கொள்கலன் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இம்சம்பவத்தில், பிரிஐ கட்சியின் ஆதரவாளரான முவாஸம் நவாஸ் என்பவரே உயிரிந்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இம்ரான் காவி;ன தவிர, பிரிஐ கட்சியின் பிரமுகர்களான செனட்டனர் பைஸல் ஜாவித் கான், நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் நசீர் சட்டா, ஒமர் மேயர் ஆகியோரும் காயமடைந்தவர்களில் அடங்கியுள்ளனர்.

அதேவேளை,  இம்ரான் கானின் காலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவி;ககப்பட்டு;ளளது. அவர் லாகூரிலுள்ள சௌத் கானும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.  இம்ரான் கானின் தொடையிலும், கீழ் கால் எலும்புப் பகுதியிலும் துப்பாக்கிச் சன்னங்களை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுளள.

இம்ரான் கானின் உடல்நிலை உறுதியாகவுள்ளது. அவர் நலமாக உள்ளார் என இம்ரான் கானின் மருத்துவர் பைசால் சுல்தான் இன்று காலை ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13