இரண்டாம் நிலை புகைப்பிடிப்பவர்களை பாதிக்கும் ஆஸ்துமா !

Published By: Digital Desk 2

04 Nov, 2022 | 11:38 AM
image

இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் பலரும் வார இறுதி நாட்களில், பனிச்சுமையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் மன இறுக்கத்திற்கும், மன அழுத்தத்திற்கும் நிவாரணம் தேடுகிறோம் எனக் கூறி, பார்ட்டிகளில் பங்குபற்றுகிறார்கள்.

இவர்கள் மது அருந்தாமலும், புகை பிடிக்காமலும் அங்கு இசைக்கப்படும் பாடல்களுக்கு நடனம் ஆடினாலும் கூட, இவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதிலும் குறிப்பாக புகை பிடிப்பவர்கள் விடும் புகையை அறிந்தும் அறியாமலும் சுவாசிக்கும் இவர்கள், ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய இல்லங்களில் தந்தை அல்லது சகோதரர் யாரேனும் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால், அவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகளின் ஆரோக்கியம் கெடுவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் சுவாச கோளாறு, நுரையீரல் தொற்றுகள், உயர் குருதி அழுத்த பாதிப்பு மற்றும் ஆஸ்துமா பாதிப்பிற்கு ஆளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புகை பிடிப்பவர்களின் அருகில் செல்லாதிருப்பதே ஆரோக்கியமான உத்தி என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் புகை பிடிப்பவர்களின் புகையை சுவாசிக்கும் நபர்களை, இரண்டாம் நிலை புகை பிடிப்பாளர்கள் என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் சுவாசிக்கும் புகையினால் அவர்களின் சுகவீனம் பாதிக்கப்படுவதுடன், மரபணுவிலும் மாற்றததை உண்டாக்குகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறக்கும் போதே குறைபாடுகளுடனும், ஆஸ்துமா தொடர்பான பாதிப்புகளுடனும் பிறப்பதற்கான சாத்திய கூறு அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனவே புகை பிடிப்பதையோ அல்லது புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதையோ முற்றாக தவிர்க்க வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29