டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெள்ளிக்கட்டிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.

27 இலட்சம் பெறுமதியான 30 கிலோகிராம் வெள்ளிக்கட்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் குருநாகல் பகுதியைச்சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளை, சுங்கப்பிரிவினர் கைப்பற்றியதுடன், குறித்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.