கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின்  2 ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.

எனினும் இறுதியாண்டு மாணவர்கள் பரீட்சைக்கு சமூகளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பீடத்தின் மாணவர்களின் பகிடிவதை சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமான இடைநிறுத்தப்படும் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.