பெண்களின் நிலை தொடர்பான ஐநா ஆணையகத்திலிருந்து ஈரானை நீக்க அமெரிக்க நடவடிக்கை: கமலா ஹரீஸ்

Published By: Sethu

03 Nov, 2022 | 01:13 PM
image

பெண்களின் நிலைமை தொடர்பான ஐ.நா. ஆணைக்குழுவிலிருந்து ஈரானை நீக்குவதற்கு தான் முயற்சிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரீஸ் இதை அறிவித்துள்ளார். 

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் மீறும் எந்தவொரு நாடும் இத்தகைய அமைப்புகளில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படக் கூடாது என வெள்ளை மாளிகையினால் புதன்கிழமை (2) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கமலா ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 22 வயதான மாஷா அமினி, பொலிஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து, ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையிலேயே அமெரிக்காவின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களின் நிலை தொடர்பான ஐநா ஆணைக்குழு (Commission on the Status of Women - CSW) பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியற்றுக்காக ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் 4 வருடங்கள் இதில் அங்கம் வகிக்கும்.

இந்நிலையில், பெண்களின் உரிமைகளை மறுப்பதன் மூலமும், தனது சொந்த மக்களை மிருகத்தனமாக ஒடுக்குவதன் மூலம் இந்த ஆணைக்குழுவில் பணியாற்றுவதற்கு தனக்கு தகுதியில்லை என்பதை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது என அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழுவிலிருந்து ஈரானை வெளியேற்றுவற்கு ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52