வரவு - செலவு திட்டத்தில் அநாவசிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படக்கூடாது - கபிர் ஹசீம்

Published By: Digital Desk 5

02 Nov, 2022 | 09:44 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது 200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. வறுமை நிலைமையிலுள்ள மக்களின் எண்ணிக்கையும் 96 இலட்சமாக அதிகரித்துள்ளது. 

எனவே அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவு திட்டம் இந்த நெருக்கடிகளிலிருந்து மீளக் கூடிய வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். 

அதில் அநாவசிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது 200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. இந்த நிலைமைக்கு ராஜபக்ஷ குடும்பமே பொறுப்பு கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. இவ்வருடம் நெற் பயிர் செய்கை 42 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 42 சதவீதம் என்பது சுமார் 3 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். தேசிய உணவு உற்பத்தி இவ்வாறு பாரியளவில் வீழ்ச்சியடைந்தால் எவ்வாறு நாடு முன்னேற்றமடையும் ?

பேராதனை பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் நாட்டில் வறுமை நிலையிலிருப்போர் எண்ணிக்கை 96 இலட்சமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது வறுமை நிலையில் இருந்தோர் எண்ணிக்கை 30 இலட்சமாக மாத்திரமே காணப்பட்டது. வறுமை நிலைமையிலுள்ளோர் எண்ணிக்கையை இவ்வாறு பன்மடங்காக அதிகரித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தற்போது எமது பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 8.5 சதவீதமாகக் காணப்படுகிறது. இவ்வருடத்தில் இதனை விடவும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்து , அதனை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்மையில் 35 பில்லியன் ரூபாவிற்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுக்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. அத்தோடு ஜனாதிபதி இதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடி நிலைமையில் இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்கள் எதற்கு? இவ்வாறான யோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றோம். மக்களுக்கு தேவையானவற்றுக்கு மாத்திரம் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவு திட்டத்தில் முன்னுரிமையளிக்கப்படும் என்;று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08