மாணவர்களுக்கான பிரத்தியேக ஒன்லைன் சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 03:30 PM
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மாணவர் வீசா வைத்திருப்போர் விமான நிறுவனத்தின் இணையதளத்தின் ஊடாக நேரடியாக முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு பல பிரத்தியேக நன்மைகளை அறிமுகப்படுத்துகின்றது. 

மாணவர் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் போது பண மீளப்பெறல் சலுகைகள் மற்றும் மேலதிக பயணச் சுமைக்கான கொடுப்பனவைச் சேமித்தல் மற்றும் வசதிகளை அனுபவிக்க முடியும்.

மாணவர்கள் தங்களது முதல் விமான டிக்கெட்டைக் கொள்வனவு செய்யும் போது உடனடியான 10 சதவீத பண மீளப்பெறலையும் மற்றும் தமது சுய பயணத்திற்காகக் கொள்வனவு செய்யும் ஐந்து வரையான மேலதிக டிக்கெட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 15 சதவீத பண மீளப்பெறலையும் பெற்றுக்கொள்வார்கள்.

இதற்கு மேலதிகமாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களைச் சந்திக்க டிக்கெட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போது ஐந்து சதவீத பண மீளப்பெறலைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்களாவார்கள்.

கல்வி பயில்வதற்காக வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்தல் என்பது மாணவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை அடிக்கடி ஏற்படுத்தும் ஒர் அனுபவமாக இருக்கக்கூடும்.

மாற்றத்தின் போது ஒரு மாணவர் முகங்கொடுக்கக் கூடிய பல்வேறு சவால்களுக்கு மத்தியில், விமானப் பொதிக்கான கொடுப்பனவு வரம்புகளின் அடிப்படையில் தமது தனிப்பட்ட உடமைகளை பொருளாதார ரீதியாக எவ்வாறு இடமாற்றம் செய்வது என்ற கேள்வியும உள்ளது.

இந்தப் பொதுவான சவாலுக்குப் பதிலளிக்கும் வகையில், ஸ்ரீலங்கன், ஒவ்வொரு வகுப்பு பயணத்தின் போதும் வழக்கமான பயணச்சுமைக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, எகொனொமி கிளாஸ் (Economy Class) மற்றும் பிஸினஸ் கிளாஸ் (Business Class) ஆகியவற்றுக்கு 10 கிலோ கிராம் மேலதிக சரிபார்க்கப்பட்ட பயணப் பொதிக் கொடுப்பனவுக்கான சலுகையையுமவழங்குகின்றது.

மாணவர்கள் தமது சுய பயணத்திற்காக கொள்வனவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒர் இலவச திகதி மாற்றத்திற்கான சலுகையையும் பெறுவார்கள்.

ஸ்ரீலங்கனின் மாணவர்களுக்காக மனப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட ஒன்லைன் (online) சலுகைகளின் தொகுப்பானது, கொழும்புக்கும் மற்றும் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற மூன்றாம் நிலைக் கல்வி வழங்குவதில் பிரபல்யம் பெற்ற நாடுகளுக்கும் இடையிலான இடைவிடாத நேரடி விமான சேவைகளுடன் இணைந்துகொள்ளும் போது நிகரற்றதாகக் காணப்படுகின்றது.

ஓவ்வொரு வருடமும் சுமார் 25,000 இலங்கை நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வியை நாடிச் செல்கின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து சர்வதேச நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோரை தனது வலையமைப்பிற்குள் கொண்டு செல்வதுடன், இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவ சமூகத்தினரிடையே சிறந்த விமான சேவை வழங்குனராகவும் இவ்விமான சேவையை மாற்றியுள்ளது.

ஓன்லைன் (online) முன்பதிவு தளங்களைப் பயன்படுத்துவதில் காணப்படுகின்ற நன்மைகள் காரணமாக இலங்கையின் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இப்போது ஒன்லைனில் (online) தங்கள் விமானங்களை முன்பதிவு செய்ய விரும்புகின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிரத்தியேக சலுகைகளுடன், மாணவர்கள் தங்கள் பயணத்தை இலகுபடுத்திக் கொள்வதற்கான அதிக நன்மைகளையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்க முடியும். 

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு https://www.srilankan.com/en_uk/special-offers/free-baggage-allowance-for-Students எனும் இணையத்தள முகவரியைப் பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right