க்ரைம் திரில்லராக தயாராகியிருக்கும் ‘டிரைவர் ஜமுனா’

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 05:28 PM
image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகளில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் டிரைவர் ஜமுனா. இதில் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.  க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கிறார்.  

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்தப்படம் நவம்பர் மாதம் 11ஆம் திகதியன்று படமாளிகைகளில் வெளியாகிறது 

படத்தைப் பற்றி இயக்குநர் கிங்ஸ்லின் பேசுகையில், ''  க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து தொண்ணூறு நிமிட பயணத்தை மையப்படுத்தி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது. ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை..அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என்பது பெரும் சவாலானது. அதனை உணர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி, ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கார் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அவர் காரை வேகமாகவும் ஓட்டுவார். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என சவால் விட்டு நடித்தார்.  இந்தப் படத்தில் லொறியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் அவரே காரை ஒட்டினார். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது,” என்றார். 

'கனா' படத்திற்குப் பிறகு, மூன்றாண்டுகள் கழித்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் படமாளிகைகளில் வெளியாகிறது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றால், அவர் தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக உயரக்கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19