இன்றைய ஆர்ப்பாட்டம் ஏன் அவசியமானது - சட்டத்தரணி ஸ்வதிகா அருளிங்கம்

Published By: Rajeeban

02 Nov, 2022 | 12:52 PM
image

ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய ஒடுக்குமுறை அச்சமூட்டும் விதத்தில் காணப்படுகின்றது அதனை எதிர்ப்பதற்காகவும் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான தளத்தை மீள ஏற்படுத்திக்கொடுப்பதற்காகவும் இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக  சட்டத்தரணி ஸ்வதிகா அருளிங்கம் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்

நீங்கள் தெரிவித்தது போல நான் தமிழ் இனத்தை சேர்ந்தவள்,

தென்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள கட்சியும் மிகதீவிரமாகஇனவாத்தை பின்பற்றியது. இதில்  விதிவிலக்கு என ஒன்றும் இல்லை.

; இடதுசாரிகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் தற்போது தங்களை மூன்றாவது அணி அல்லது மாற்றீடு என வர்ணிக்கும் அரசியல் கட்சிகள் மிகமோசமான இனவாத கட்சிகள்.

தெற்கில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள கட்சியும் இனவாத கொள்கையை கொண்டிருந்தது.

அவ்வாறிருந்தும் நான் நவம்பர் இரண்டாம் திகதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றேன்.

உங்கள் முகநூலில் நீங்கள் வீதிகளை மீள கைப்பற்றுதல் குறித்து தெரிவித்திருந்தீர்கள்  அதன் மூலம் என்ன தெரிவிக்க முயல்கின்றீர்கள்? நவம்பர் இரண்டுபேரணியின் நோக்கம் என்ன?

பதில்-

காலிமுகத்திடல் தாக்குதலிற்கு பின்னர் ஜூலை 22 ம் திகதி-  நாங்கள் வீதிக்குவரும்போதெல்லாம் சிறிய எண்ணிக்கையிலான மக்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவு பொலிஸார் காணப்படுவதை காணமுடியும்.

எங்களால் வீதியில் நடமாடமுடியாது நாங்கள் ஒரு அடி முன்னோக்கி எடுத்துவைத்தவுடன் பொலிஸ் அதிகாரிகள் வருகின்றனர் பட்டன்கள் வருகின்றன,எங்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் எங்கள் மீது நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்கின்றனர்.

இந்தவருடம் ஏப்பிரல் மாதம் நாங்கள் ஒரு சூழ்நிலையை உருவாக்கினோம், சாதாரண மக்கள் முன்னர் அனுமதிக்கப்படாத காலிமுகத்திடலின் முக்கிய பகுதிகளிற்குள் அவர்கள் வரும் சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

அந்த பகுதி சங்கிரிலா போன்ற ஐந்து நட்சத்திரவிடுதிகளும் இராணுவத்தினரின் முகாம்களும் காணப்படும் ஒரு பகுதி.

சாதாரண மக்கள் அங்குவந்தார்கள் கூடாரங்களை அமைத்தார்கள் அமர்ந்தார்கள் அது இலங்கை மக்களிற்கான இடம் வர்க்கம்  இனம் பாலினம் ஆகியவற்றிற்கு அப்பால் அனைத்து இலங்கையர்களிற்குமா இடமாக அது காணப்பட்டது.

எனினும் காலிமுகத்திடல் மூடப்பட்டவுடன் இது முடிவிற்குவந்தது.

அதிகரித்துவரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக  அதிகரித்துவரும் தற்போது பொருளாதார ஒடுக்குமுறை தற்போது வீதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான தேவையுள்ளது.

மக்கள் சீற்றத்துடன் உள்ளனர் அவர்களின் சீற்றத்தினை வெளிப்படுத்துவதற்கான  தளம் அவசியம்.

மேலும் எங்களால் எங்கள் அரசியல்தலைவர்கள் மீது நாட்டை குறிப்பிட்ட திசையில் எடுத்துச்செல்லுமாறு கோருவதற்கான அழுத்தங்களை கொடுக்க முடியும்.

அதற்கான தளம் ராஜபக்ச ஆதரவுடனான  ரணில்விக்கிரமசிங்கவினால் மூடப்பட்டுள்ளது.இந்த தளத்தையே நாங்கள் மீண்டும்  கைப்பற்ற முயல்கின்றோம்.

ஆனால் இதனை வெறுமனே ஒரு அரசியல் கட்சியின் ஆதரவுடன் செய்ய முடியாது ஏனென்றால் காலிமுகத்திடலின் அதிசயம் அல்லது தனித்துவம் அல்லது விசேடமான அம்சம் என்னவென்றால் ஒரு அரசியல் கட்சியி;ன தலைமைத்துவம் கூட காணப்படாததே.

தன்னிச்சையாக மக்கள் ஒன்றுசேர்ந்தனர் நான் முன்னர் தெரிவித்தது போலவர்க்கம் இனம் உட்பட அனைத்து பிரிவினைகளையும் கைவிட்டு அவர்கள் அணிதிரண்டார்கள்.

பாலின வேறுபாடுகளை கூட கைவிட்டார்கள் - பல பெண்கள் இணைந்துகொண்டார்கள் நள்ளிரவில் காலிமுகத்திடலில் தங்கியிருந்தார்கள்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் தனித்துவமான அம்சம் இது.

நடைபெறும் விடயங்கள் குறித்து குறிப்பாக பொருளாதாரம் தொடர்பில் தங்களிற்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக வீதிக்கு வருவதற்கான நம்பிக்கையை நாங்கள் மீண்டும்  ஏற்படுத்தவேண்டும்.

நவம்பர் 2ம் திகதி ஆர்ப்பாட்டம் அதனையே செய்ய முயல்கின்றது,நாங்கள் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள்  மாணவர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயல்கின்றோம், அவர்கள் அணிதிரண்டு தற்போது இடம்பெறும் ஒடுக்குமுறைக்கு எதிரான அதிருப்தியை பொருளாதார நிலை குறித்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க முயல்கின்றோம்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் போது  அரசியல் கட்சிகள் நிராகரிக்கப்பட்டன தற்போது இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு ஏன் அவர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்?

வரலாற்றின் பல்வேறு தருணங்களில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் கௌரவம் உரிமை தொடர்பில் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளன.

உதாரணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியை பாருங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது

ஐக்கியதேசிய கட்சி வரலாற்று ரீதியில் இனவாதகலவரங்களிற்கு தலைமை வகித்துள்ளது,ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் மக்களின் உரிமைகள் கௌரவங்கள் தொடர்பில் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளன.

இதேவேளை வரலாற்றின் பல்வேறு தருணங்களில் ஆளும்கட்சியின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த வேளைகளில்  எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.ஒடுக்குமுறைக்கு  எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இது எதிர்கட்சிகளின் அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கையா?

ஆம்.

அவர்கள் அதிகாரத்தில் இல்லாததால்  அவர்கள் ஜனநாயக ரீதியில் செயற்படலாம் -

ஆனால் எங்களை போன்றவர்களிற்கு இது எந்த விதத்தில் உதவுகின்றது.

தற்போது நாங்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றோம்,இராணுவ அதிகாரிகள் கொழும்புவீதிகளில் ரோந்து வருகின்றனர் ஏன் அவர்கள் ரோந்து வருகின்றனர் நாட்டில் யுத்தம் உள்ளதா இல்லை.

நீங்கள் அரசியல் கட்சியின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லாவிட்டால் பொலிஸார் பட்டனுடன் வருவதற்கு முன்னர் இரண்டடி கூட உங்களால் முன்னேற முடியாது.

ஏதோ ஒரு காரணத்திற்காக - அரசியல் சந்தர்ப்பவாத நோக்கமாக கூட இருக்கலாம் அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து நாங்களும் உங்களுடன் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வோம் என தெரிவிக்கின்றன.

ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய ஒடுக்குமுறை காரணமாக - இந்த ஒடுக்குமுறை பணபலம் இராணுவ பலம் அனைத்தையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது - இது மிகமிக அச்சமூட்டும் விதத்தில் காணப்படுகின்றது.

இது நாங்கள் ராஜபக்ச காலத்தில் பார்த்ததை விட மோசமானது.

நாங்கள் அதனை எதிர்கொள்கின்றோம் நாங்கள் எதிர்கொள்கின்ற பெரும் அலை அதுதான்  ஆகவே அதனை எதிர்ப்பதற்காக நான் ஒருபோதும் இணைந்து செயற்பட்டிருக்க விரும்பாத அரசியல் கட்சிகளுடன் நான் ஆர்ப்பாட்டத்தில் இணையப்போகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22