• அதி­கா­ரங்­களை பகிர்­வதை எதிர்க்­க­வில்லை 
  • பொலிஸ் அதி­கா­ர­மில்­லாத 13 இக்கு தயார் 
  • முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்க முடி­யாது 
  • வடக்கு, கிழக்கை இணைக்க முடி­யாது 
  • மஹிந்த ராஜ­பக் ஷ இன­வாதி அல்ல  
  • த.தே.கூ.வின் அர­சியல் சித்­தாந்தம் என்ன? 
  • குற்­ற­மற்ற அர­சியல் கைதிகள் உள்­ளனர்

நாட்டில் ஆட்­சியில் இருக்கும் தேசிய அர­சாங்­கத்­திடம் தேசிய கொள்கை இல்லை. அவர்­க­ளுக்கு தேசிய அர­சி­யலும் தெரி­யாது. உலக அர­சி­யலும் தெரி­யா­து. என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புதல்­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ கடு­மை­யாக சாடி­யுள்ளார்.

வரவு – செல­வுத்­திட்டம், நாட்டின் அர­சியல் நிலை­மைகள், உலக அர­சியல் மாற்­றங்கள் தொடர்­பாக வீரகேச­ரி இணையத்தளத்திற்கு வழங்­கிய பிரத்­தி­யேக விசேட செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்டம் குறித்த தங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 6சத­வீ­தத்தை கல்­விக்கும் 3சத­வீ­தத்தை சுகா­தா­ரத்­திற்கும் ஒதுக்­கு­வ­தாக கூறப்­பட்­டது. ஆனால் இந்­த­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் கல்­விக்கு மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 0.6சத­வீ­தமும் சுகா­தா­ரத்­திற்கு 1.25சத­வீ­த­முமே ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன் மூலம் 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்டம் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­றது என்­பதை உணர்ந்­து­கொள்ள முடி­கின்­றது. இந்த வரவு–செல­வுத்­திட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உரை­யாற்­றும்­போது வெவ்­வேறு பட்ட கருத்­துக்­களை தெரி­விக்­கின்­றார்கள். நேர­டி­யான வரி விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒரு­சாரார் கூறு­கின்ற அதே­நேரம் நேரில் முறை­யி­லான வரி விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிறி­தொரு சாரார் கூறு­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்­ள­வர்­க­ளுக்கே எவ்­வா­றான வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது தெரி­யா­துள்­ளது. ஆகவே இந்த வரவு–செல­வுத்­திட்­டமும் கடந்த வரவு செல­வுத்­திட்­டத்­தைப்­போன்று வெறு­மனே பொய்­யான விட­யங்­க­ளையே கொண்­டுள்­ளது.

அதே­நேரம் இந்த வரவு–செல­வுத்­திட்­ட­த்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்கு அதி­கப்­ப­டி­யான நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் எந்த அடிப்­ப­டையில் வாக்­க­ளித்­தார்கள் என்­பது தெரி­யா­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்கு அதி­கப்­ப­டி­யான நிதியை ஒதுக்­கி­யி­ருந்தார். அவ்­வாறு அதி­கப்­ப­டி­யான நிதி ஒதுக்­கீட்டை செய்த வரவு செல­வுத்­திட்­டத்தை எதிர்த்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு ரூபா கூட ஒதுக்­கீடு செய்­யாத இந்த வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளிக்­கின்­றார்கள்.

அதனை பார்க்­கும்­போதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் சித்­தாந்தம் என்­ன­வென்­பது தொடர்பில் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. ரவி­ க­ரு­ணா­நா­யக்­கவும் அர­சாங்­கத்­த­ரப்­பி­னரும் நினைக்கும் விட­யங்­களே இந்த வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­ளன. வேறொன்­றையும் நாம் காண­மு­டி­யாது.

கேள்வி:- தங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் பெரு­ம­ள­வான கடன் தொகை பெறப்­பட்­டுள்­ளது. அதனை மீளச்­செ­லுத்­த­வேண்­டி­யுள்­ளதன் விளை­வா­கவே இத்­த­கைய வரவு–செல­வுத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்:- அது முழு­மை­யாக பொய்­யான விடயம். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­கும்­போது மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கடன்­சுமை நூற்­றுக்கு நுற்­றியி­ரண்டு ­வீ­த­மாக இருந்­தது. 2015ஆம் ஆண்டு நாட்டை மீண்டும் கைய­ளிக்­கும்­போது அந்த கடன்­சு­மையை நூற்­றுக்கு 70.7 வீ­த­மாக குறைத்­தி­ருந்தார்.

தற்­போது புதிய அர­சாங்­கத்தின் 18மாத ஆட்­சிக்­கா­லத்தில் நூற்­றுக்கு 78.7 ­வீ­த­மாக கடன்­சுமை அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. ஆகவே அதி­க­மாக கடன்­பெற்­றது யார்?

தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு எந்­த­வொரு நாடும் கடன்­களை வழங்­கா­தது ஏன்? சர்­வ­தேச நாணய நிதியம் பல நிபந்­த­னைகள் விதிப்­பது ஏன்? இந்த அர­சாங்­கத்­தினால் கடன்­களை மீளச்­செ­லுத்த முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் நிபந்­த­னை­களை போட­வில்லை. கடன்­களை வழங்­கி­னார்கள். மீண்டும் செலுத்­து­வார்கள் என்ற நம்­பிக்கை இருந்­தது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும், மத்­தள விமா­ன ­நி­லை­யத்­தையும் இரண்டு பில்­லியன் அமெ­ரிக்க டொலருக்கு விற்­பனை செய்ய முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­கின்றார். மஹிந்த ராஜ­பக் ஷ 600மில்­லி­யனை கடன்­க­ளாக பெற்று அமைக்­கப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முகம், மத்­தள விமான நிலையம் ஆகி­ய­வற்றின் பெறு­மதி ஐந்து வருட காலங்­களில் இரண்டு பில்­லி­ய­னாக இருக்­கின்­றது. பத்து இரு­பது வரு­டங்­களில் இவற்றின் பெறு­மதி எவ்­வ­ள­வாக இருக்கும்.

நாம் கடன்­களைப் பெற்று நாட்டில் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வதே திட்­ட­மா­க­வி­ருந்­தது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினர் அவ்­வா­றில்லை. மத்­திய வங்கி பிணை­மு­றிகள் விட­யத்தில் 120பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான நட்டம் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்­ளது. அந்த நட்­டத்தை தவிர்த்­தி­ருந்தால் கடன்­பெ­ற­வேண்­டிய அவ­சி­ய­மில்­லையே.

கேள்வி:- பாரா­ளு­மன்­றத்தில் 51 உறுப்­பி­னர்கள் பொது எதி­ர­ணி­யா­க­வுள்­ளனர். அந்த அணி­யி­னரின் உண்­மை­யான நிலைப்­பாடு என்ன?

பதில்:- எமக்கு இந்த நாட்­டிற்கு உரிய அர­சாங்­க­மொன்றை அமைக்­க­வேண்டும். நாட்டு மக்­க­ளுக்கு உதவும் அர­சாங்­க­மொன்றை அமைக்­க­வேண்டும் என்­பதே நிலைப்­பா­டா­க­வுள்­ளது.

புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று 18மாதங்­க­ளா­கி­யுள்­ளன. வடக்கு கிழக்கில் செய்­துள்ள அபிவி­ருத்தி என்ன? எது­வு­மில்லை.

ஆனால், வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏழரை இலட்சம் கிடைக்கும். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்த தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு கிடைக்­கப்­போ­வது என்ன? எதுவு­மில்லை. அதே­போன்று தான் தெற்கு மக்­க­ளுக்கும் எதுவும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளுக்கு காரும் எரி­பொ­ருளும் கிடைக்கும். புதி­தாக நிதியும் கூடு­த­லாக கிடைக்கும். பிர­தமர் ரணில் கொடுப்­ப­னவை அதி­க­ரிப்­ப­தற்கு யோசனை முன்­வைத்­துள்ளார். அந்­தவ­கையில் பார்க்­கை யில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு ஆண்­டொன்­றுக்கு ஒரு­கோடி ரூபா கிடைக்­கின்­றது.

கேள்வி:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்ள நிலையில் பொது எதி­ர­ணி­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்பை கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றார்கள். இந்­நி­லையில் நாட்டில் நீடிக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:- தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்க­வேண்டும். அது நாட்டை இரண்­டாக பிள­வு­ப­டுத்­து­வ­தல்ல. பொலிஸ் பிரிவை இரண்­டாக உரு­வாக்­கு­வது அல்ல. அவ்­வாறு செய்­வ­தென்­பது இல­கு­வான விடயம்.

அயர்­லாந்தில் சிங்பென் அமைப்பின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக நாட்­டிற்கு நடுவில் சுவரை அமைத்­தார்கள். உற­வு­களை பிரித்­தார்கள். நண்­பர்­களை பிரித்­தார்கள். பிரச்­சி­னைக்கு தீர்­வைக்­கண்­டார்கள். பேர்­லினில் சுவரை அமைத்து பிரச்­சினையை தீர்த்­தார்கள். பலஸ்தீன் இஸ்ரேல் எல்­லைப்­பி­ரிப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கின்­றார்கள்.

எல்­லை­களை பிரிப்­பதால் எமது பிரச்­சி­னைகள் தீரப்­போ­வ­தில்லை. எல்­லை­களை இரண்­டாகப் பிரித்தால் இரு­பு­றமும் நின்று சண்டை பிடிப்­பார்கள். அது­வொரு புற­மி­ருக்­கட்டும். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு கோரு­வது போன்று முழ­ுமை­யான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சென்று வடக்­கையும் கிழக்­கையும் இணைத்து தனி­யாக்கி வழங்­கி­விட்டோம் என்று வைப்போம். அப்­ப­டி­யென்றால் தெற்­கி­லுள்ள தமி­ழர்­க­ளுக்கு எதனை வழங்­கு­வது?

ஆகவே இரண்­டாக பிள­வு­ப­டுத்தி இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­மு­டி­யாது. அதனை விடுத்து அனை­வரும் ஒன்­று­சேர்ந்த அபி­வி­ருத்தி, தொழில்­வாய்ப்பு, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டத்­திற்குச் செல்­ல­வேண்டும்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­­மைப்பு செயற்­பா­டுகள் நடை­பெற்­று­வரும் நிலையில் நாட்­டைப்­பி­ளவு படுத் தும் விட­யங்கள் அதி­லுள்­ளன எனக் கூறு­கின்­றீர்­களா?

பதில்:- நிச்­ச­ய­மாக, அது­மட்­டு­மின்றி நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­றது. நான் சட்டம் ஒழுங்கு தொடர்­பான உப­கு­ழுவில் அங் கம் வகிக்­கின்றேன். ஒன்­பது பொலிஸ் ஆணைக்­கு­ழுக்கள் எமக்கு அவ­சி­ய­மில் லை என்று யோச­னையை முன்­வைத்­துள் ளேன். ஒரு பொலிஸ் ஆணைக்­குழு போது­மா­னது.

இந்த உப­கு­ழுவில் ஒன்­பது பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிப்­பது என்ற யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. நாட்டில் ஒன்­பது பொலிஸ் ஆணைக்­கு­ழுக்கள் காணப்­ப­டு­மாயின் என்ன நடக்கும்?

கேள்வி:- தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யாக இருக்­கட்டும் ஏனைய முஸ்லிம் தலை­வர்­க­ளாக இருக்­கட்டும் ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கா­ரங்­களை பகி­ர­வேண்­டு­மென்றே கோரு­கின்­றார்­களே தவிர யாரும் நாட்டை பிள­வு­ப­டுத்­து­மாறு கோர­வில்­லையே?

பதில்:- அவை அனைத்தும் வச­னங்­களே. அதி­கா­ரப்­ப­கிர்வு விடயம் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் தற்­போ­தி­ருக்­கின்ற விட­யங்­களை அமுல்­ப­டுத்­தினால் எமக்குப் பிரச்­சினை இல்லை.

நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்பில் பிரச்­சினை உள்­ளது. பொலிஸ் அதி­கா­ரங்­களை பகிர்­வ­தென்­பது அத்­த­கை­ய­தொரு பிரச்­சி­னை­யாகும். இரா­ணு­வத்­தி­னரை அகற்­று­வது என்­பதும் அவ்­வா­றான­தொரு பிரச்­சி­னை­யாகும். அவ்­வா­றான பிரச்­சி­னை­யொன்று வரு­மா­க­வி­ருந்தால் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்ன?

சரி அவ்­வா­றில்­லாது எமது நாட்­டுக்கு வெளியில் இருந்து நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­மா­க­வி­ருந்தால் என்­ன­செய்­வது? இந்­தியா, பாகிஸ்தான் ஆகி­ய­வற்றில் வேறு­பட்ட தீவி­ர­வாத அமைப்­புக்­களின் நெருக்­க­டிகள் உள்­ளன. மாலை­தீவில் பங்­க­ளா­தேஷில் வேறு­வ­கை­யான பிரச்­சி­னைகள் உள்­ளன.

ஆகவே எல்­லை­க­ளி­லி­ருந்து படை­களை அகற்ற முடி­யாது. எமது இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படை அனைத்­துமே உறு­தி­யான கட்­ட­மைப்­புக்­க­ளாகும். அவற்றை அகற்­றிய பின்னர் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­மாயின் அதற்கு எவ்­வாறு முகங்­கொ­டுப்­பது.

அமெ­ரிக்கா, பிரித்­தா­னிய உள்­ளிட்ட நாடுகளும் தேசிய பாது­காப்பில் கவனம் செலுத்­து­கின்­றன. ஆகவே நாங்கள் எமது நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக கவனம் செலு­த்த­வேண்டும்.

அதே­நேரம் எமது நாடு­போன்ற சிறி­ய­தொரு நாட்டில் ஒன்­பது பொலிஸ் ஆணைக்­கு­ழுக்கள் செயற்­ப­ட­மு­டி­யாது. அடுத்­த­தாக இந்த ஒன்­பது பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­க­ளையும் நிய­மிப்­பது யார்? இதற்கு யார் பொறுப்­புக்­கூ­று­ப­வர்­க­ளாக இருக்­கப்­போ­கின்றார்கள்?

மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டால் நேர­டி­யாக மாகாண முத­ல­மைச்­சரே பொறுப்­புக்­கூ­று­ப­வ­ரா­கின்றார். அவ்­வாறு பார்த்தால் பொலிஸ் துறையின் சுயா­தீனம் எங்கே? பொலிஸ் பிரிவு முழு­மை­யாக அர­சி­ய­லா­க்கப்­பட்டு விடும்.

இந்­தியா எமது நாட்­டைப்­போன்று 25மடங்கு பெரி­யது. அத்­த­கைய நாடொன்­றுக்கு இவ்­வி­டயம் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­கலாம். எமது நாட்டில் அத்­த­கைய அதி­கா­ர­ப­கிர்­வுக்குச் சென்றால் இல்­லா­தி­ருக்­கின்ற பிரச்­சினை மீண்டும் எழு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. இனங்­க­ளுக்­கி­டையில், கிரா­மங்­க­ளுக்­கி­டையில், மாகா­ணங்­க­ளுக்­கி­டையில், அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கலாம்.

நாம் அதனை உப­கு­ழுவின் கூட்­டங்­க­ளின்­போது தொடர்ச்­சி­யாக கூறி­வந்­த­ிருக்­கின்றோம். ஆகவே இதனை விடுத்து நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான செயற்­றிட்­டத்தை முன்­னெ­டுங்கள். கிரா­மங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை கொண்டு செல்­லுங்கள். பிர­தேச சபை­யொன்­றுக்கு அதி­க­ளவு அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு நாம் எதிர்ப்பு தெரி­விக்­கப்­போ­வ­தில்லை.

அதி­கா­ரங்­களை பகிர்­வ­தற்­கான உண்­மை­யான காரணம் என்ன? அர­சி­ய­ல­மைப்பை மாற்றி வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ அல்­லது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கோ அதி­க­ாரங்­களை வழங்­கு­வது நோக்­க­மில்­லையே. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருக்­கலாம் நாங்­க­ளாக இருக்­கலாம் மக்­க­ளுக்கு அதி­கா­ரத்தை வழங்­குங்கள் என்றே கூறு­கின்றோம்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் நீங்கள் அதி­கா­ரங்­களை பகிர்­வதை எதிர்க்­க­வில்­லையா?

பதில்:- அதி­கா­ரங்­களை கீழ்­மட்­டத்­துடன் பகிர்­வ­தற்கு நாங்கள் எதிர்க்­க­வில்லை. அதில் எமக்கு பிரச்­சி­னையும் இல்லை. பிராந்­திய அதி­கா­ரங்­களை பகிர்தல், தேசிய பாது­காப்­புக்கு அச்சு­றுத்தல் ஏற்­ப­டுத்தல், ஒரே தேசம் என்ற கட்­ட­மைப்பை மற்­று­வ­தாயின் நாம் அதனை எதிர்ப்போம்.

கேள்வி:- நீங்கள் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்ப்­பில்­லை­யென கூறு­கின்­றீர்கள். அவ்­வா­றாயின் வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்­டு­மல்­லவா?

பதில்:- வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு நாம் முழு­மை­யாக எதி­ரா­ன­வர்கள். 13 ஆவது திருத்­தச்­சட்டம் என்­பது எமக்குத் தேவை­யா­ன­தொன்­றல்­லவே. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் இருப்­பது இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவை­யா­ன­தொரு விடயம் அல்ல. அது இந்­தி­யா­வுக்கு தேவை­யான விட­ய­மொன்­றாகும். எமது நாட்டில் காணப்­படும் வடக்­கையும் கிழக்­கையும் இணைக்­க­வேண்­டிய அவசியம் கிடை­யாது. மாகாண­ ச­பை­யாக கொண்டு செல்­ல­மு­டியும். அதன் கார­ணத்தால் வடக்­கையும் கிழக்­கையும் மஹிந்த ராஜ­பக் ஷ காலத்தில் இரண்­டாக பிரித்தார். வடக்­கையும் கிழக்­கையும் இணைப்­பது அதி­கா­ரப்­ப­கிர்வும் அல்ல. தெற்கு மாகா­ணமும் மேல்­மா­கா­ணமும் இணைந்தால் என்­னா­வது?

அத்­தோடு புதிய அர­சி­ய­ல­மைப்பு நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­றது. இந்த அர­சி­ய­ல­மைப்பில் அண்­மைய நாட்டின் தலை­யீ­டுகள் உள்­ளன. அமெ­ரிக்­காவின் தலை­யீ­டுகள் உள்­ளன. அந்­நா­டு­களின் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 2000ஆம் ஆண்டு தீர்­வுத்­திட்­டத்தை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு இச்­செ­யற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- முன்னாள் ஜனா­தி­பதி 13பிளஸ் தரு­வ­தாக கூறினார், கூட்­ட­மைப்­புடன் 18சுற்றுப் பேச்­சுக்­களை நடத்­தி­னாரே?

பதில்:- நாங்கள் 18 சுற்­றுப்­பேச்­சுக்­களை நடத்­தினோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எழுந்து சென்­று­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அன்று அமர்ந்­தி­ருக்­கலாம். மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு இவ்­வாறு வாக்­க­ளித்­தி­ருக்­கு­மா­வி­ருந்தால் தற்­போது வடக்கு கொழும்­பையும் விட முன்­னே­றி­யி­ருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வின்­றியே வடக்கு அபி­வி­ருத்­தியை மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்தார். ஒரு வாக்கு கூட ஆத­ர­வாக கிடைத்­தி­ருக்­க­வில்லை. வாக்கு அளிக்­காது விட்­டாலும் கூட அந்த தமிழ் மக்கள் முன்னாள் ஜனா­தி­ப­தியை ஆத­ரிக்க ஆரம்­பித்­தார்கள்.

ஒரு வாக்கைக் கூட பெறாது விட்­டாலும் ஏ9வீதி, காங்­கேசன் துறைக்­கான புகை­யி­ர­தப்­பாதை போன்ற அனைத்து விட­யங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

நாங்கள் 13 பிளஸ் தொடர்­பாக பேசி னோம். கிரா­மங்­க­ளுக்கு அதி­காரம் வழங்­கு­வ­தையே 13 பிளஸ் எனக் கூறினோம். 13 ஆவது திருத்­தச்­சட்டம் முத­ல­மைச்­சர்­க­ளுக்கே அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்­றது. நாங்கள் சாதா­ரண மனி­த­னுக்கு அதி­கா­ரத்தை அளிப்­பது தொடர்­பி­லேயே பேசினோம். அதுதான் 13பிளஸ். அது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­படும் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்த்­தது.

கேள்வி:- தங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா, ராவணா பலய போன்ற அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் தலை­தூக்­கி­யி­ருந்­தன. அதுவும் தங்­களின் ஆட்சி வீழ்ச்சி அடை­வ­தற்கு ஒரு கார­ண­மா­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போதும் கூட பொது எதி­ர­ணி­யா­க­வி­ருக்கும் குழு­வினர் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள பெளத்த கடும்­போக்­கு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்­களே?

பதில்:- பொது­ப­லசேனா உட்­பட இவ்­வா­றான குழுக்கள் அனைத்­துமே அனு­ச­ரணை வழங்­கப்­பட்ட குழு­வி­னர்­களே. வெவ்­வேறு நாடுகள் அக் குழுக்­க­ளுக்கு பணத்தை வழங்கி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கும் இடையில் இருந்த உறவை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­ப­டுத்­தி­னார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

தற்­போது பாருங்கள். பொது­ப­ல­சேனா அமைப்­புக்கு அனு­ச­ரணை வழங்­கி­ய­வர்கள் தற்­போது அமைச்­ச­ர­வையில் உள்­ளார்கள். இதனை நாம் கூற­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, குறிப்­பாக அமைச்­சர்­களின் பெயர்­களை குறிப்­பிட்டுக் கூறி­னார்கள்.

முஸ்லிம் கட்­சிகள், குறித்த அமைச்சர் ஒரு­வரே அளுத்­கம சம்­ப­வத்தின் பின்னால் உள்­ள­தாக கூறி­னார்கள். அவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்­களை கொண்­ட­வர்கள் ஜன­வரி 8ஆம் திகதி அந்­தப்­பக்­கத்­திற்கு சென்று விட்­டார்கள். அவர்கள் அமைச்­ச­ர­வையில் தற்­போது உள்­ளார்கள்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன முதன்­மு­த­லாக பிரிந்து செல்­லும்­போது சென்ற இரு­வரே அவர்­க­ளா­வார்கள். அன்று அவர்கள் மீது நாமல் ராஜ­பக் ஷ குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­க­வில்­லையே. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ், ரிஷாட் பதியூ­தீனின் கட்சி ஆகி­ய­னவே குற்­றச்­சாட்­டுக்­களை அவர்கள் மீது சுமத்­தி­னார்கள்.

ஆட்­சி­யா­ளர்­களை மாற்­று­வ­தற்­காக செல­வ­ளிக்­கப்­பட்ட பணத்தில் ஒரு பங்கு தான் பொது­பல சேனா­வுக்கும் சென்­றது. அவ்­வ­மைப்­புடன் எமக்கு தொடர்பில்லை. ஆனால் அப்­ப­ழியை எம்­மீது போட்­டு­விட்­டார்கள்.

வெவ்­வே­றான நிலைப்­பா­டு­களை கொண்­ட­வர்கள் பொது எதி­ர­ணியில் இருந்­தாலும் தேசிய கொள்கை இருக்­கின்­றது. தேசிய அர­சாங்­கத்­திடம் தேசிய கொள்கை இல்லை. தேசிய நல்­லி­ணக்கம் என்­பது வெறு­மனே பெய­ர­ள­வி­லேயே உள்­ளது. நல்­லி­ணக்கம் என்ற வச­னத்தால் உணவு, கல்வி, தொழில் கிடைத்­து­விடப் போவ­தில்லை. தொலைக்­காட்சி, வானொ­லி­களில் சொல்­வ­தற்கே நல்­லி­ணக்கம் என்ற பெயரில் சர்­வ­தேசம் அதி­க­ளவு பணத்தை வழங்­கு­கின்­றது. அதி­க­ளவில் பணத்தைப் பெறும் வச­னத்தைப் பயன்­ப­டுத்­தியே இந்த நாட்டில் அர­சியல் செய்­யப்­ப­டு­கின்­றது. பொது எதி­ர­ணியில் பல்­வேறு கருத்­துக்கள் இருந்­தாலும் அதற்கு தேசிய கொள்கை இருக்­கின்­றது. இன­வாதம் எமது கொள்கை அல்ல. மஹிந்த ராஜ­ப­க்ஷவை இன­வாதி என்று என்­றுமே கூற­மு­டி­யாது.