கெளரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

Published By: Nanthini

02 Nov, 2022 | 11:19 AM
image

(வாழைச்சேனை நிருபர்)

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை' வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் 100 நாள் செயல்முனைவுப் போராட்டத்தின் 93ஆவது நாள் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பில் உள்ள பலநோக்கு கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், தாங்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இதேவேளை தாங்கள் பயமின்றி நடமாடுவதற்கு  அரசியல் ரீதியாக தீர்வு வேண்டும், கருத்துச்சுதந்திரம் வேண்டும் முதலான  கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து கிராம உள்வீதியில் ஒன்றுகூடியவர்கள் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக நடந்து சென்றனர். 

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 'வேண்டும் வேண்டும் அரசியல் உரிமை வேண்டும்', 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்',  'ஒன்றுகூடுவது எங்கள் உரிமை' என கோஷங்களை எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த போராட்டத்தில் சிவில் அமைய கள இணைப்பாளர் இ.ரமேஸ் கலந்துகொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமானதும் நியாயமானதுமான அரசியல் உரிமை கிடைக்கப்பெற வேண்டும்; அந்த வகையில் எதிர்காலத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் கௌரவமான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கிறோம் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது பிரதேச மக்கள் தங்கள் பகுதியில் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினைகள், வாழ்வாதார தேவைகள், குடியிருப்பு பிரச்சினைகள், காணி மற்றும் வீடில்லா பிரச்சினைகள், வீதி புனருத்தாரணம், விவசாயம், மீன்பிடி தொழில்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறுபட்ட விடயங்களை முன்வைத்து, கௌரவமான அரசியல் உரிமையை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் நெறிப்படுத்துநர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் இந்த 100 நாட்கள் செயல்முனைவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04