சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாவதை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்புக்கு உட்படுத்ப்பட்டது.

 மஸ்கெலியா சுகாதார பரிசோதகர்களினால்  குறித்த சுற்றிவளைப்பு இன்று முன்னெடுக்கப்பட்டது.

 டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனெளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட் நல்லத்தன்னி பிரதேச வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் வெதுப்பகங்கள் என திடீர் பரிசோதனை நடைபெற்றது.

 பரிசோதணையின் போது இனம் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து காட்டவேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்து இவ்வாறான திடீர் பரிசோதணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.