முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தூய்மையாக்கும் பணி ஆரம்பம் !

Published By: Raam

26 Nov, 2016 | 02:29 PM
image

முல்லைத்தீவு  மாவட்டத்தின் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட  மல்லாவி வன்னிவிளாங்குளம்  மாவீரர் துயிலும் இல்லத்தில்  சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினாலும் மக்கள் பிரதிநிதிகளாலும்  சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர்  திரு கமலேஸ்வரன் தலைமையில்  ஆரம்பிக்கப்பட்டு   முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அதிகளவிலான மக்களும் இந்த சிரமதான பணியில் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்தோடு மாவீரர் தினமான நாளை மாலை வேளையில் இங்கு மாவீரர்களுக்கு  அஞ்சலிகள் செலுத்தப்பட்டு சிறப்பு விளக்கேற்றும் நிகழ்வும் இடம்பெற உள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி  ஸ்ரீஸ்கந்தராசா  தெரிவித்தார்.

கிளிநொச்சி மாட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் நேற்றைய தினம் முதல் சிரமதானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்