மோர்பி தொங்கு பால அனர்த்தம் - உடல்களை புதைப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Published By: Rajeeban

01 Nov, 2022 | 01:05 PM
image

indian express

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதால்  இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காக குடும்பத்தினர் வரிசையில் நிற்கவேண்டிய பரிதாப நிலை காணப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மோர்பியில் உள்ள முஸ்லீம் மையவாடியில் புதைகுழிகளிற்குள் பக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறுதிவிடை செலுத்துவதற்காக குழுமியிருந்தனர் .

துயரத்தில் சிக்குண்டுள்ள குடும்பத்தவர்களை உறவினர்கள் ஆறுதல்படுத்த முயன்றுக்கொண்டிருந்த அதேவேளை  பணியாளர்களின் உதவியுடன் உறவினர்கள் தங்கள் குடும்பத்தவர்களிற்கான புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தங்கள் குடும்பத்தினரின் உடல்களை புதைப்பதற்காக காத்திருந்தவேளை  சிலர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டனர்,சிலர் கதறியழுதனர் சிலர் மௌனமாக அழுதனர்  

பிரதேப்பெட்டிகள் போதாமை உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

குஜராத்தில் பொதுமக்களை அதிகமாக கவரும் புதுப்பிக்கப்பட்ட தொங்குபாலம் கடந்த வாரம் அனர்த்தத்தில்  சிக்கியவேளை பெருமளவானவர்கள் அதன்மேல் நின்றுகொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை 50 இந்துக்களின் இறுதி நிகழ்வுகளும் இடம்பெற்றன,மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு இஸ்லாமிய மையவாடியில் 37 முஸ்லீம்களின்  இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றன.

உள்ளுர் வர்த்தகர் ரபீக் கபார் தனது இரு உறவினர்களை புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்,21 வயது நிசார் இக்பால் 21-12 வயது அர்மாட் இர்பான் ஆகியவர்களின் உடல்களை புதைத்;தார்.

அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தாயாரிடம் தொங்குபாலத்திற்குசெல்வதாக தெரிவித்திருந்தனர்.

அனர்த்தம் நிகழ்ந்ததை கேள்விப்பட்டவுடன் குடும்பத்தினர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு பெரும் குழப்பம் நிலவியது என 45 வயது கபார் தெரிவித்தார்,மக்கள் அழுதவண்ணம் கதறியவாறு காணப்பட்டனர் உலக அழிவுநாளின் காட்சி போல அது காணப்பட்டது என அவர் தெரிவித்தார்.

நீரில் எல்லா பக்கத்திலும் உடல்கள் மிதந்தன,பாலத்தில் சிக்குப்பட்ட மக்கள் மீட்குமாறு கோரி கதறியவண்ணமிருந்தனர்.

அந்த காட்சிகளை பார்த்தபின்னர் எங்களிற்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை அவர்களின் உடல்களை பார்க்கவேண்டும் என மாத்திரம் நினைத்தோம் எட்டு மணித்தியாலங்களாக அவர்களின் உடலை தேடினோம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக மறுநாள் காலை ஆறுமணிக்கு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

எங்கள் குடும்பம் பெருந்துயரில் சிக்குண்டுள்ளது இதிலிருந்து மீள்வது கடினம் என்றார் அவர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13