மற்றொரு தீர்மானம் மிக்க போட்டியில் இங்கிலாந்து - நியூஸிலாந்து

Published By: Digital Desk 5

01 Nov, 2022 | 12:45 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான தீர்மானம் மிக்க ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி ப்றிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இங்கிலாந்து வெற்றிபெற்றால் குழு 1க்கான கடைசிக் கட்டப் போட்டி முடிவுகளே அரை இறுதி அணிகளைத் தீர்மானிக்கும்.

இங்கிலாந்து தோல்வியைத் தழுவினால் உலகக் கிண்ணத்திலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதியபோது டெறில் மிச்செல் (72 ஆ.இ.), டெவன் கொன்வே (46), ஜேம்ஸ் நீஷாம் (27) ஆகியோர் திறமையாக துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்தின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

அப் போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இந்த வருட நியூஸிலாந்து அணியிலும் இடம்பெறுவதால் இந்த வருடம் சம்பியனாவதற்கு அனுகூலமான அணியாக கருதப்படுகிறது.

எனவே இன்றைய போட்டியில் நியூஸிலாந்தை வெற்றி கொள்வது இங்கிலாந்துக்கு இலகுவாக அமையப்போவதில்லை.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள குழு 1க்கான போட்டிகளில் சகலதுறைகளிலும் நியூஸிலாந்து பிரகாசித்துள்ளது.

ஆனால், இங்கிலாந்தின் ஆற்றல்கள் திருப்தி தருவதாக அமையவில்லை.

இந்த இரண்டு அணிகளும் பங்குகொண்ட போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவிலான பெறுபேறுகளைக் கொண்டுள்ளன.

2007இல் இருந்து கடந்த வருடம்வரை இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் 22 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 12 போட்டிகளில் இங்கிலாந்தும் 8இல் நியூஸிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. சமநிலையில் முடிவடைந்த போட்டியில் இங்கிலாந்து சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றதுடன் மற்றொரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

அணிகள்

இங்கிலாந்து : ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித், மார்க் வூட்.

நியூஸிலாந்து: டெவன் கொன்வே, பின் அலன், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், க்லென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்குசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58