நான்கு கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்  கலுபான, மீடியாகொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் மீடியாகொட, பெத்தேகம மற்றும் ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர்.