சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின்  உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றான கென்டன் போபுரத்தின் உச்சிக்கு சென்று சுற்றி பார்வையிட்டதோடு புகைப்படங்களையும் எடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சீனாவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு நேற்று முன்தினம் 23 ஆம் திகதி சீனா சென்றது.

 சீனா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும்.  

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் முக்கியமான பொருளாதார நிலையங்களுக்கும், டபோர் விஹாரைக்கும் சென்றதோடு கென்டன் போபுரத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

இதன்போது இலங்கையில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரம் தொடர்பிலும் அங்கு நினைவுப்படுத்தியுள்ளார்.