அல்சைமரை தடுக்கும் வாசிப்பு பழக்கம்

Published By: Digital Desk 7

28 Oct, 2022 | 10:29 AM
image

புத்தக வாசிப்பு பழக்கம், அறிவாற்றல் திறனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும், வயதாகும்போது நரம்பியல் சார்ந்த கோளாறுகளில் இருந்தும் காப்பாற்றும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மூளை செயல்திறனுக்கு மாத்திரமன்றி, வாசிப்பு பழக்கம் சிறுவர்களுக்கு இருந்தால், அல்சைமர் போன்ற அறிவாற்றல் திறன் குறைபாடு சார்ந்த நோய்களும் தடுக்கப்படும். 

அல்சைமர் என்பது மூளையை சுருங்கச் செய்து, மூளை செல்களை சிதைக்கும் ஒருவகை நரம்பியல் கோளாறு சார்ந்த நோயாகும். இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட நபரின் சமூக செயல்பாடு, நடத்தை, சிந்தனைத்திறன் குறையும்.

அப்படிப்பட்டவர்கள் வாசிப்பு போன்ற மன ரீதியான தூண்டுதல் செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது வயது அதிகரிப்பதால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பிரச்சினைகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்