கோட்டாவுக்காக ஆஜராவதில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர்

Published By: Digital Desk 3

28 Oct, 2022 | 10:15 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார்.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்க இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

குறித்த மனுவானது உயர்நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட,ஏ.எச்.என்.டி நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்க மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதி பதவி வகிக்காத நிலையில் அவருக்காக இனிமேல் இந்த மனுவில் சட்டமாதிபர் ஆஜராகமாட்டார் என அறிவித்தார்.

எனினும் இந்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் அளிக்குமாறு அவர் மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பாக நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும் குறித்த கோரிக்கைக்கு மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரவிந்திரநாத் தாபரே கடும் ஆட்சேபனை முன்வைத்தார்.

எனினும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க சட்டமாதிபருக்கு இருவார காலவகாவசத்தை நீதியரசர்கள் வழங்கினர்.

அதன்படி, இந்த மனுவானது எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீள பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17