இன்றைய திகதியில் திருமணமாகி ஒன்றோ இரண்டோ குழந்தைப் பெற்றத் தம்பதிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கவிருக்கும் கடைசி கட்டத்திலோ அல்லது மாதவிடாய் கோளாறின் காரணமாகவோ மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் தங்களின் கர்ப்பப் பையை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றிக் கொள்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர்கள் தொடர்ந்து மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டியதிருக்கும். அதே போல் தற்போது தைரொய்ட் பிரச்சினை ஏற்பட்டால் அதனையும் அகற்றிவிடலாமா? என கேட்கிறார்கள்.

ஆனால் இத்தகைய நிலை, பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலை. தற்போது தைரொய்ட் பிரச்சினை எத்தகையதாக இருந்தாலும் சத்திர சிகிச்சை செய்யாமலே மாத்திரைகள் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலம் குணப்படுத்திட இயலும். புற்றுநோய் இருந்தால் மட்டுமே சத்திர சிகிச்சை செய்யவேண்டியதிருக்கும். ஒரு சிலருக்கு தைரொய்ட் நீர்க்கட்டிகளால் அசௌகரியமாக உணர்ந்தால் அவர்களின் விருப்பதிற்காக சத்திர சிகிச்சை செய்கிறோம். அயோடின் கதிர்வீச்சு சிகிச்சை மற்று;ம மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத நிலையில் சத்திர சிகிச்சைத்தான் சிறந்த தீர்வு. ஆனால் சத்திர சிகிச்சையில்லாமல் தைரொய்ட் பிரச்சினைகளை 90 சதம் வரை குணப்படுத்த இயலும் என்பதே இன்றைய நிலை.

டொக்டர் G.சண்முக சுந்தர் M.D., D.M.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்