எவ் 16 போர்விமானங்களை பாக்கிஸ்தானிற்கு விற்கும் பைடனின் முடிவு குறித்து கடும் விமர்சனம்

Published By: Rajeeban

27 Oct, 2022 | 03:19 PM
image

washingtonexaminer

40 மில்லியன் டொலர் எவ்16 விமானங்களை பாக்கிஸ்தானிற்கு வழங்குவது குறித்தும் தரமுயர்த்துவது குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்து இரண்டு மாதங்களாகின்றன.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் விமான விற்பனை பாக்கிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உதவும் என தெரிவித்தார்.

பிளிங்கெனின் கருத்தில் இரண்டு முரண்பாடுகள் உள்ளன.

முதலாவதாக கடந்தகால சம்பவங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது பாக்கிஸ்தான் எவ்16 விமானங்களை பலோச்சிஸ்தானில் உள்ள தனது சொந்த மக்களிற்கு எதிராக பயன்படுத்தலாம் .

பலோச்சிஸ்தானில் தசாப்தகாலமாக நிலவிய தவறான ஆட்சி முறை சிறிய அளவு கிளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

பாக்கிஸ்தான் தனது சொந்த மக்களிற்கு எதிராகவே ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப்பது தார்மீக ரீதியில் முறையற்றதுஇஎதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரில் பாக்கிஸ்தான் இராணுவம்ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை சந்தித்துள்ள அதேவேளை பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐ பயங்கரவாத குழுக்களிற்கு தொடர்ந்தும் நிதி ஆயுத உதவிகளையும் ஆதரவையும் வழங்கிவருகின்றது.

உள்நாட்டில் பயங்கரவாதிகளை ஊக்குவித்ததன் மூலம் ஏற்படுத்திய பாதிப்புகளிற்காக எதிர்காலத்தில் அவ்வாறா ன நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து ஐஎஸ்ஐ அமைப்பை தடுப்பது என்ற அரசியல் முடிவை பாக்கிஸ்தானின் அரசியல் தலைவர்கள் எடுக்காத வரை தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவிப்பதை அமெரிக்கா நம்பக்கூடாது.

பாக்கிஸ்தானின் மனித உரிமை துஸ்பிரயோகங்களும் உள்நாட்டை தவறாக நிர்வகித்துள்ளமையும் அமெரிக்காவின் கரிசனைக்குரிய விடயங்கள் இல்லை என பைடனும் பிளிங்கனும் வாதிடலாம்.

எவ் 16 விமானங்களை விற்பனை செய்வது பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரி செய்யும் என அவர்கள் கருதலாம்.

எனினும் அவர்கள் அமெரிக்க பாதுகாப்பை அதிகளவிற்கு பாதிக்கும் ஒரு விடயத்தை புறக்கணிக்கின்றனர்- பாக்கிஸ்தானும் சீனாவும் இணைந்து தொடர்ந்து விமானப்படையின் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளனஇஇந்த ஒத்திகைகளில் சீனாவும் பாக்கிஸ்தானும் இணைந்து தயாரித்த ஜேஎவ் 17 தண்டர் போர்விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும் இந்த போர்விமான ஒத்திகையில் செங்டு எவ்-7 போர்விமானங்களையும் ஈடுபடுத்தினர்.

2020 போர் ஒத்திகையின் போது டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்த விரும்பாததன் காரணமாக பாக்கிஸ்தான் 75-எவ் 16 விமானங்களை பயன்படுத்தவில்லை.

ஆனால் தற்போது பைடனின் சீற்றம் குறித்து பாக்கிஸ்தான் தலைவர்கள் அச்சப்படாத நிலை காணப்படுவதுடன் பாக்கிஸ்தானின் வாக்குறுதிகளும் மீறப்படுகின்றன.

அல்ஹைதாவிற்கு ஒருபோதும் அடைக்கலம் அளிக்கப்போவதில்லை தலிபானிற்கு நிதி ஆயுதங்களை அளிக்கப்போவதில்லை என்ற பாக்கிஸ்தானின் வாக்குறுதிகளை எவரும் மறக்க முடியாது.

எவ் 16 என்பது பழையது என்பது சீனாவிற்கு நன்கு தெரியும்இஆனால் பாக்கிஸ்தான் சீனாவுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபடுவது என்பது சீனாவின் புதிய போர்விமான ஓட்டிகள் அமெரிக்க விமானங்களிற்கு எதிராக பயிற்சியில் ஈடுபடுவதற்கும் தங்கள் தந்திரோபாயங்களை மெருகுபடுத்துவதற்கும் உதவும்.

துருக்கி ரஸ்யாவிடமிருந்து எஸ் 400 போர் விமானங்களை கொள்வனவு செய்த பின்னர் எவ் 35 போர்விமானத்தில் துருக்கியின் பங்களிப்பை இந்த காரணத்திற்காகவே அமெரிக்கா நிறுத்தியது.

துருக்கி ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்த எஸ் 400 போர்விமானங்கள் எவ் 35 விமானங்களின் திறமையை ரஸ்யா அறிந்து கொள்வதற்கு உதவியிருக்கும்.

மேலும் பாக்கிஸ்தான் ஏற்கனவே சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது இதன் மூலம் இந்த தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒசாமா பின் லாடனை கொள்வதற்கான நடவடிக்கையின் பின்னர் அந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிதைக்கப்பட்டமைக்கு இதுவே காரணம்.

இந்தியா அமெரிக்கா ரஸ்யா பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது தனது ஆயுததளபாட தொழிற்துறையையும் கொண்டுள்ளது.

எனினும் இந்தியர்கள் ஒருபோதும் புலனாய்வு நடவடிக்கைகளிற்காக தங்கள் ஆயுதங்களை வேறு நாடுகளிற்கு வழங்கியதில்லை.

அவர்கள் வேறு நாடுகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களின் விமானங்களை ஆயுதங்களை உற்பத்தி செய்ததில்லை.

இராஜதந்திர ரீதியிலான நோக்கங்களிற்காக சர்வதேச பாதுகாப்பை பலவீனப்படுத்தும் கொள்கைகளை பிளிங்கெனும் பைடனும் தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

பாக்கிஸ்தானிற்கான ஆயுத விற்பனைக்கான கதவுகளை காங்கிரஸ் மூடவேண்டிய நேரமிது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22