போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது - மனுஷ

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பை சுற்றிவளைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இன்று போராட்டத்தில் ஈடுப்படுவதற்கான உண்மை நோக்கம் என்ன,போராட்டங்களினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு போராட்டங்களை தொடர்ந்தால் நாடு என்ற ரீதியில் மேலும் பாதிப்படைய நேரிடும்.யதார்த்த நிலையை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும் என வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எரிபொருள்,எரிவாயு விநியோக கட்டமைப்பின் பாதிப்பு மற்றும்,தவறான அரசியல் தீர்மானங்களினால் மக்கள் போராட்டம் தோற்றம் பெற்று அது வன்முறையாக மாற்றமடைந்தது.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியடைந்து கடந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்படுவதற்கான காரணம் என்ன,எரிபொருள்,எரிவாயு ஆகியவை தற்போது முறையாக கிடைக்கப்பெறுகிறது.

மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை,நீதிமன்றத்தினால் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட தரப்பினரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுப்பட்டு பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை பலவீனப்படுத்தவே ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

போராட்டம் இடம்பெறும் நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரமாட்டார்கள்.நாடு வழமைக்கு திரும்பும் நிலையில் போராட்டத்தில் ஈடுப்படுவது முறையற்றதாகும்.

நாட்டில் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்காகவே ஒருதரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது.

அத்தியாவசிய  பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.மூல பொருட்களின் விலை குறைவடைந்தாலும்  உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையான தன்மையில் பேண கொள்கை திட்டத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31