நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள் ; இல்லையேல் போராட்டம் - இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 04:33 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு அத்தியாவசிய பொருட்கள்  உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அன்றாடம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்வதற்கு முடியாமல் தோட்டப்புறங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார்கள் தோட்டப்புறங்களில் தொழில் புரியும்  தொழிலாளர்களால் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார்கள்.

 இந்நிலையில் 45 வீத சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்பட வேண்டும்.  நியாயமான கோரிக்கைகளுக்கு  தீர்வினை பெற்றுத் தரவில்லை என்றால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் என்று இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிசந்த வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இதன்போது முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ, ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஊழல் மற்றும் மோசடி ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட  அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கம் தற்போது 102 வருடங்களை கடந்து பயணிக்கிறது. 

இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கம் மற்றும் இலங்கை தோட்ட முதலாளிமார் சங்கத்திற்கும் இடையில் 1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம 74 வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் தோட்ட முதலாளிமார் சங்கம்  தொழிலாளர்களுடைய அடிப்படையான நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுக்கிறது. வழங்கப்படும் 25 வீத சம்பளம் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் போதுமானதாக இல்லை.

அன்றாட வாழ்க்கை செலவினை ஓரளவேனும் ஈடுசெய்வதற்காக 45 வீத சம்பள உயர்வினை கேட்டுள்ளோம். 

எமது அடிப்படை சமபள பிரச்சினைகள் மற்றும் எமது ஏனைய நியாயமான கோரிக்கைகளுக்கும்   தீர்வினை பெற்றுதர வேண்டும். மேலும் எமது பிரச்சிகைளுக்கு தீர்வு பெற்றுத் தரவில்லை என்றால் பாரியதொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் மற்றும் அவர்களுக்கு எதிராக வீதியில் இறங்குவோம் என்றார்.

மேலும் அரசாங்கம் மற்றும் முதலாளிமார்கள் சம்மேளனம் தோட்டத் சேவையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். 

இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முதலாளிமார் சம்மேளனம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் . அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14