குங்குமப்பூவால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?

Published By: Digital Desk 7

25 Oct, 2022 | 11:42 AM
image

ரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான், அழகான குழந்தை என்பதை கருத்தில் கொண்டே, குங்குமப்பூ சாப்பிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

கருவுற்ற பெண்களுக்கு 5 தொடக்கம் 9ஆம் மாதங்களுக்குள் குங்குமப்பூ சாப்பிட கொடுக்கலாம். இது இரத்த சோகையைப் போக்கி, குழந்தையையும் தாயையும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும். 

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலில் இட்டுக் காய்ச்சி அருந்தினாலும், பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து, குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. 

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை குணப்படுத்தவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும், தினமும் 1/2 கிராம் அளவு குங்குமப்பூவை ஒரு டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது. 

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி, படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால், ஜீரண சக்தி அதிகரித்து, நன்கு பசியைக் கொடுக்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால், தாது விருத்தியாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். இரத்தம் சுத்தமாகும். இரத்தச் சோகை நீங்கும். கருவுற்ற பெண்களை சளி, இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்து. மருத்துவரை கலந்தாலோசித்து இதனை பயன்படுத்துவது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29