'இறக்கும்வரை நன்மதிப்புடன் வாழ நினைத்தேன் ': செய்தியாளர் மாநாட்டில் வீரசூரிய உருக்கம்

Published By: MD.Lucias

24 Nov, 2016 | 07:37 PM
image

(பா.ருத்ரகுமார்)

மஹபொல நிதியத்தில் 1.5 பில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொது எதிரணியினர் என் மீது குற்றம் சுமத்தியுள்ளமை என் வாழ்நாளில் சந்தித்த மிகப்பெரிய அவப் பெயராக நினைக்கின்றேன். 78 வயதில் இவ்வாறான குற்றச்சாட்டு எனக்கு தேவையா? நான் இறக்கும் வரையில் நன்மதிப்புடன் வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி  விக்கிரம வீரசூரிய மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.

மஹபொல நிதியத்திலிருந்து பணத்தை சூரையாடியதாக, அபி­வி­ருத்தி மூலோ­பாய  மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர விக்­கி­ர­ம­ மற்றும் சட்டத்தரணி  விக்கிரம வீரசூரிய ஆகியோருக்கு  எதி­ராக, இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் கூட்டு எதி­ர­ணி­யினர் முறைப்­பாடொன்றை நேற்று பதிவுசெய்­துள்­ளமை தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் 

எனது வாழ்நாளில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டதில்லை. எனது சேவையைப்பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். 

எனது இரு மகன்களுக்கும் மஹபொல நிதியத்திலிருந்து ஒரு சதமேனும் செலவழிக்கவில்லை. 

எனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நான் இறப்பதற்கு முன்னர் சரியாகிவிடும் என நினைக்கின்றேன். 

 வாழ்நாள் முழுவதும் நன்மதிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளேன். 

எனது மகன்  குறிப்பிட்ட இரு நிறுவனத்தில் முதலீட்டாளர் என்பதற்காக இவ்வாறு வீண் பழி சுமத்துவது சரியான விடயமல்ல.

 இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எனது நிலைப்பாட்டையும் உண்மையான சான்றுகளையும் சமர்ப்பிப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15