மலையகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடத் தயாராகும் மக்கள்

Published By: Nanthini

23 Oct, 2022 | 04:52 PM
image

(க. கிஷாந்தன்)

தீபாவளி பண்டிகை நாளை திங்கட்கிழமை 24ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியுள்ளது.

ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவை, டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகரப் பகுதிகளில் இன்றும் சந்தை களைகட்டியுள்ளதை காண முடிகிறது. 

சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.

இன்று (ஒக் 23) ஹட்டனில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் அதிகளவான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருக்கிறது.

இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். 

பெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தீபாவளி முற்பணமாக சில தோட்டங்களில் மாத்திரம் 15,000 ரூபா வழங்கப்பட்ட போதிலும், இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதிருந்த நிலையையும் இன்று ஹட்டன் நகரில் காணக்கூடியதாக உள்ளது. 

பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

வருடம் ஒரு முறைதான் பண்டிகை வருகிறது; அதனால்தான் கடன் பட்டாவது கொண்டாடுகிறோம் என சிலர் கூறுவதையும் கேட்க முடிகிறது.

கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் தொழிலுக்குச் சென்றவர்கள், இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் பொதுப் போக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் நிமித்தம் இரவு, பகலாக பொலிஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமையை காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47