தாய்நாட்டை சூழ்ந்திருக்கும் இருளை விரட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இணைவோம் - ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

Published By: Nanthini

23 Oct, 2022 | 03:56 PM
image

ண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

சுபீட்சமான ஒரு நாட்டுக்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை. 

இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம் வாழ்விலும் நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும். இதனை குறிக்கோளாகக் கொண்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று இத்தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். 

இம்முறை தீபாவளி பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். தீபத்திருநாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01