364 வயாகரா மாத்திரை வாங்கிய பெண் ஜனாதிபதி

Published By: Raam

24 Nov, 2016 | 03:19 PM
image

தென்கொரியாவின் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பார்க்குன் ஹெயின் தனது நீண்ட கால தோழி சோய் சூன்னை உதவியாளர் போல் வைத்திருந்தார்.

ஆனால், சோய் சூன் தனது அதிகாரங்களை கையில் எடுத்து ஏராளமான தவறுகளை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் ஆண்களுக்கான செக்ஸ் வீரிய மாத்திரையான வயாகரா மாத்திரைகளை அதிகளவில் அரசு பணத்தில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 364 மாத்திரை இவ்வாறு வாங்கி இருக்கிறார்.

ஏன் இந்த மாத்திரைகளை அவர் வாங்கினார் என்பது மர்மமாகவுள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் செய்தார். அந்த நாடுகள் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் இருக்கின்றன. இதனால் அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என கருதி அதை தடுக்கும் வகையில் வயாகரா மாத்திரை வாங்கியதாகவும், ஆனால், அந்த மாத்திரையை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதுபற்றி எதிர்க்கட்சியினர் கூறும் போது,ஜனாதிபதி தனி ஒரு உல்லாச உலகத்தில் வாழ்ந்தார். அதற்காக இந்த மாத்திரைகள் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35