கொட்டாஞ்சேனையில் இரு இளைஞர்கள்  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கடற்படை தளபதிக்கு  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணித்துக்கொண்டிருந்த ரத்னசாமி பரமானத்தன்  மற்றும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.