5 வயதுக்கு குறைவான யானைக் குட்டிகளை பெரஹெரா மற்றும் சமய நிகழ்வுகளில் பயன்படுத்துவதும் 10 வயதுக்கு குறைந்த யானைகளிடம் வேலை பெறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை நிலைநாட்டுவதற்காக, விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை தயாரித்து அதனை வெளியிடுவது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்டத்தின் கீழ் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வருடாந்த அனுமதிப் பத்திரத்துடன் பயிற்றப்பட்ட யானைகளை வைத்திருக்க சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யானைக் குட்டியை வைத்திருக்கும் இடம், யானைக் குட்டியின் சுகாதார நிலை, சிறப்பாக வைத்திருத்தல், பொறுப்பாளர் அல்லது உரிமையாளரின் பொறுப்பு உள்ளிட்ட 41 நிபந்தனைகள் குறித்த அனுமதி பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.