மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அயர்லாந்திற்கும் ஸிம்பாப்வேக்கு எதிராக ஸ்கொட்லாந்திற்கும் இன்று முக்கிய போட்டிகள் !

Published By: Digital Desk 5

21 Oct, 2022 | 10:05 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை, நெதர்லாந்து அணிகளைத் தொடர்ந்து 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்றுக்கு பி குழுவிலிருந்து தகுதிபெறப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகள் ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில்  இன்று  நடைபெறவுள்ளன.

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் அயர்லாந்தும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயை ஸ்கொட்லாந்தும் எதிர்த்தாடவுள்ளன.

இவற்றில் வெற்றிபெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளும் நான்கு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளன.

இந்த நான்கு அணிகளில் அயர்லாந்து (180 - 4 விக்.), ஸ்கொட்லாந்து (176 - 5 விக்.), ஸிம்பாப்வே (174 - 7 விக்,) ஆகிய 3 அணிகளும் அதிக மொத்த எண்ணிகைகளைப் பெற்ற அணிகளில் முதல் 3 இடங்களில் இருப்பதால் இன்றைய தினமும் இந்த அணிகள் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கொட்லாந்திடம் மேற்கிந்தியத் தீவுகளும் ஸிம்பாப்வேயிடம் அயர்லாந்தும் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் தோல்வி அடைந்தன.

எனினும் இரண்டாது போட்டிகளில் ஸ்கொட்லாந்தை அயார்லாந்தும் ஸிம்பாப்வேயை மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிகொண்டன.

இதன் காரணமாக 4 அணிகளும் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையிலேயே அணிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளோ, நிகர ஓட்ட வேக வித்தியாசமோ கருத்தில் கொள்ளப்படமாட்டாது. மாறாக இன்றைய போட்டிகளின் முடிவுகளே எந்த இரண்டு அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்.

மேலும் நடந்து முடிந்த போட்டி முடிவுகளை எடுத்துக்கொண்டால் நான்கு அணிகளுக்கும் வெற்றிபெறக் கூடிய திறமை இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆகவே, இன்றைய தினம் எந்த இரண்டு அணிகள் திறமையாக விளையாடுகின்றனவோ அந்த அணிகளுக்கே வெற்றிகிட்டும்.

மேற்கந்தியத் தீவுகள் எதிர் அயர்லாந்து

WI vs IRE Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11 Team, Playing  XI, Pitch Report And Weather Updates – West Indies vs Ireland Match 11,  Group B, ICC T20 World Cup 2022

ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்திடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் திவுகள் இரண்டாவது போட்டியில் தொழில்சார் கிரிக்கெட்டுக்கு உரிய வகையில் சகலதுறைகளிலும் பிரகாசித்து ஸிம்பாப்வேயை வெற்றிகொண்டது.

ஜோன்சன் சார்ள்ஸ், ரோவ்மன்   பவல் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் அல்ஸாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அதேவேளை, அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், எவின் லூயிஸ், கய்ல் மேயர்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த அயர்லாந்து, இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்தை வெற்றிகொண்டதன் மூலம் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது. இரண்டாவது போட்டியில்   கேர்ட்டிஸ் கெம்ஃபர் சகலதுறைகளிலும் பிரகாசித்து தனது அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தார்.

அயர்லாந்தின் ஏனைய வீரர்களும் சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் அதிகபட்ச பங்களிப்பை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

West Indies: Kyle Mayers, Johnson Charles, Evin Lewis, Nicholas Pooran (c & wk), Shamarh Brooks, Rovman Powell, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Odean Smith, Obed McCoy

Ireland: Paul Stirling, Andrew Balbirnie (c), Lorcan Tucker (wk), Harry Tector, Curtis Campher, George Dockrell, Gareth Delany, Mark Adair, Simi Singh, Barry McCarthy, Joshua Little

ஸிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து

SCO vs ZIM Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11 Team, Playing  XI, Pitch Report And Weather Updates – Scotland vs Zimbabwe Match 12, Group  B, ICC T20 World Cup 2022

இன்று நடைபெறவுள்ள கடைசி முதல் சுற்று போட்டியில்  ஸிம்பாப்வேயும் ஸ்கொட்லாந்தும் சுப்பர் 12 வாய்ப்பை பெறுவதற்காக வெற்றியைக் குறிவைத்து கடுமையாக போட்டியிடவுள்ளன.

அயர்லாந்துடான ஆரம்பப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததன் மூலம் 31 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஸிம்பாப்வே, இரண்டாவது போட்டியில் அதே ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம்  ஸிம்பாப்வே தோல்வி கண்டது.

சிக்கந்தர் ராஸா குவித்த அரைச் சதத்தின் உதவியுடனேயே ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வே வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த போட்டியில் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் அவரது அணி தோல்வியைத் தழுவியது.

ரெஜிஸ் சக்கப்வா, அணித் தலைவர் க்ரெய்க் இவான்ஸ், சோன் வில்லியம்ஸ், ப்லெசிங் முஸராபனி ஆகிய பிரதான வீரர்கள் இன்றைய போட்டியில் தமது அணியை வெற்றிபெறச் செய்ய முயற்சிக்கவுள்ளனர்.

இதேவேளை, தனது இரண்டு போட்டிகளிலும் திறமையாக துடுப்பெடுத்தாடி 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியிலும் கணிசமான ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற முயற்சிக்கவுள்ளது.

இதுவரை இந்த சுற்றுப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய 86 ஓட்டங்களைப் பெற்றுள்ள மைக்கல் ஜோன்ஸ் (அயர்லாந்துக்கு எதிராக), முதல் போட்டியில் அரைச் சதம் குவித்த ஜோர்ஜ் முன்சே மற்றும் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய மார்க் வொட் ஆகியோர் மீண்டும் பிரகாசித்து ஸ்கொட்லாந்து அணியை சுப்பர் 12 சுற்றில் விளையாட வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zimbabwe: Regis Chakabva (wk), Craig Ervine (c), Wesley Madhevere, Sean Williams, Sikandar Raza, Milton Shumba, Ryan Burl, Luke Jongwe, Tendai Chatara, Richard Ngarava, Blessing Muzarabani

Scotland: George Munsey, Michael Jones, Matthew Cross (wk), Richie Berrington (c), Calum MacLeod, Michael Leask, Chris Greaves, Mark Watt, Josh Davey, Safyaan Sharif, Brad Wheal

இது இவ்வாறிருக்க, இன்றுடன் முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெறுவதுடன் நாளை நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் அவஸ்திரேலியாவுக்கும் உப சம்பியன் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழாவின் சுப்பர் 12 சுற்று ஆரம்பமாகவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58