ஹெட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெல்மதுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.