உக்ரேன் போர்க்களத்திலும் சமூக ஊடகங்களிலும் வெற்றிபெறுகின்றது

Published By: Rajeeban

20 Oct, 2022 | 12:06 PM
image

போர்ப்ஸ் 

உக்ரேன்  யுத்தம் குறித்த விடயங்கள் உலகிற்கு தெரியவரும் விதத்தையும் உலகம் அதனை பார்க்கும் விதத்தையும் சமூக ஊடகங்கள் மாற்றியமைத்துள்ளன.

உக்ரேன்  பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடக்கூடிய நிலைமை காணப்படுகின்ற அதேவேளை உக்ரேன்  அரசாங்கமும் இராணுவமும் தங்கள் வெற்றியை – ரஸ்யாவின் பின்வாங்கலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட ரஸ்ய படையினர் கைப்பற்றப்பட்ட அழிக்கப்பட்ட டாங்கிகள் குறித்து உக்ரேன்  வெளியிடும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் அந்த பதிவுகள் உக்ரேன்  மக்களை அணிதிரட்டுவதற்கு உதவியுள்ளன.

உக்ரேன்  யுத்தத்தின் முதல்நாளிலிருந்து   சமூக ஊடகங்கள் பல்வேறு சுவாரஸ்யமான விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கின்றார் Dr. Lasha Tchantouridze, professor and director of the graduate programs in Diplomacy and International Relations at Norwich University.

உக்ரேன்  அரசாங்கம் சமூக வலையமைப்புகளை சிறந்த விதத்தில் பயன்படுத்தியுள்ளது. ஆனால் உக்ரேனின் கொள்கைளிற்கு ஆதரவான தனியார் அமைப்புகளும் குழுக்களும் தனிநபர்களும் அரசாங்கத்தை விட இந்த விடயத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளன.

மேலும் ரஸ்ய எதிர்ப்பாளர்களும் மேற்குலகத்தினரும்  இணைந்து சமூக ஊடக உள்ளடக்கங்களை சமூக ஊடகங்கள் இடமளித்துள்ளன.

தனிப்பட்டவர்கள் உக்ரைனிற்கான  உள்ளடக்கங்களை உருவாக்கி அந்தநாட்டின் நிலை பற்றிய செய்திகளை அதிகரிப்பதன் மூலம் உக்ரைனிற்கு உதவியுள்ளனர் என்கின்றார் பேராசிரியர்Lasha Tchantouridze

போர் முன்னரங்குகளில் இருந்து படங்களையும் வீடியோக்களையும் டுவிட் செய்வதில்  பதிவிடுவதில் பகிர்ந்துகொள்வதில் உக்ரைனின் பிரச்சார சாதனங்கள் மாத்திரம் ஈடுபடவில்லை- ரஸ்யாவிற்கு எதிரானவர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரேனிற்கான ஆதரவு எதிர்பாராத தரப்பொன்றிடமிருந்து கிடைத்துள்ளது என்கின்றார் பேராசிரியர்Lasha Tchantouridze ரஸ்ய எதிர்ப்பாளர்களும் குழுவினரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர் இவர்களில் சிலர் ரஸ்யாவிலிருந்தே செயற்படுகின்றர் சிலர் ரஸ்யாவிற்கு வெளியே இருந்து செயற்படுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான தகவல் தொகுப்பு மேற்கில் உக்ரைன் சார்பான பொதுவான கருத்தை  உருவாக்கவும் வலுப்படுத்தவும் உதவியுள்ளது.

ரஸ்யாவின் தோல்விகள்

போர்க்களத்தில் பின்னடைவுகளிற்கு அப்பால் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும் ரஸ்யா தவறியுள்ளது.

பெப்ரவரியில் தூண்டப்படாத தாக்குதலை ஆரம்பித்தது முதல் சமூக ஊடகங்கள் விடயத்தில் ரஸ்யா பாதகதன்மையை எதிர்கொண்டுள்ளது.

உக்ரேன் மீதான தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இவை பாரியளவில் உருவமற்ற அளவில் இடம்பெற்றன என்கின்றார் Dr. William Pelfrey Jr., professor in the Wilder School of Government and Public Affairs at Virginia Commonwealth University.

ரஸ்யா மிக வேகமாக பல சமூக ஊடக சேவைகளில் இருந்து தடை செய்யப்பட்டதுஆனால் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரெம்ளின் உக்ரைனை போல பாரியளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதே இதற்கு காரணம்.

உக்ரேன்  எவ்வாறு தூரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தியுள்ளது என்பதற்கும்  ரஸ்யா எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தியுள்ளது என்பதற்குமான வித்தியாசம் திறந்த சமூகம் ஒன்றிற்கும் மூடப்பட்ட சமூகமொன்றிற்கும் இடையிலான வித்தியாசம் எனகின்றார் ரெபேகா  வெயன்டிரோப்.emerita founding director of the online master of communication management program at the Annenberg School for Communication and Journalism at the University of Southern California.

மாறாக ரஸ்யா அனைத்து சுதந்திர ஊடகங்களையும் மௌனமாக்கியது சமூக ஊடகங்கள் தெரிவிப்பதை கிரௌம்ளினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால்  சமூக ஊடக பாவனை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியின் நிலைப்பாடே வெளியாகியதுயுத்தத்தை பொறுத்தவரை யுத்தத்தை ஆரம்பித்து தொடர்வதற்கான நியாயப்படுத்தல்களை தொடருவதற்கு ரஸ்யா விரும்பியது.

கிரெம்ளின் ஆதரவு குழுக்கள் கூட கடும் கட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. அவர்களிற்கு சிறிய அளவிலான ஒரேமாதிரியான செய்திகளை பதிவிடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் புத்தாக்க திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதன் அர்த்தம் ரஸ்யா சமூக ஊடகங்களில் இருந்து முற்றாக அகற்றப்பட்டுள்ளது என்பதல்ல.

ரஸ்ய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட விதத்தில் தனது நாட்டில் சமூக ஊடகங்களை தடை செய்துள்ளது அல்லது கட்டுப்படுத்தியுள்ளதுடன் ஏனையவர்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்கின்றார்

யூடியுப்பே ரஸ்யாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகம் இதற்கு அடுத்ததாக  டெலிகிராம் காணப்படுகின்றது  யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்து டெலிகிராமை ஜட் சனல்கள் என்பவை ஆக்கிரமித்திருந்தன ஆனால் தற்போது டெலிகிராமில் ரஸ்ய எதிர்கட்சியினரும்  தீவிரமாக செயற்படுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றார்

ரஸ்யாவின் இழப்புகள் அதிகரிப்பதை தொடர்ந்து அதன் ஆதரவாளர்களும் தற்போது விமர்சகர்களாகியுள்ளனர்.

போர் முன்னரங்கிலிருந்து

சமூக ஊடகங்கள் காரணமாக சாதாரண உக்ரைன் மக்கள் தாங்கள் சந்தித்த பயங்கரமான அனுபவங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இது ரஸ்யா தனது விசேட இராணுவநடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக மேற்கொண்ட பிரச்சாரங்களை முறியடிக்க உதவியுள்ளது.

இந்த இடுகைகள் மிகவும் விபரமானவையாக மனித துயரங்கள் நிரம்பியவையாக காணப்படுகின்றன போரின் நுண்ணிய மற்றும் பெரும் தாக்கங்கள் இரண்டையும் வெளிப்படுத்துகின்றன என தெரிவிக்கும் வெய்ன்டிரோப் ரஸ்யாவின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் உட்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தினருக்கான பாதிப்பு குறித்தே இந்த இடுகைகள் விபரிக்கின்றன எனவும் குறிப்பிடுகின்றார்.

ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களினால் இழைக்கப்பட்ட அநீதிகளை பகிர்ந்துகொள்வதற்கும் இந்த பதிவுகள் உதவியுள்ளன.

கடந்தகாலங்களில் முன்னரங்குகளில் இருந்து இவ்வாறான தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவது சாத்தியமற்றதாக காணப்பட்டது.

உலகத்தினால் இந்த காட்சிகளை பார்க்க முடிவதால் உலகின் கருத்தில் இவை தாக்கத்தை செலுத்தியுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களின் கதைகளை தெரிவிப்பது குடும்பங்கள் வறுமை மற்றும் வீடின்மையால் துன்புறுவது காணாமல்போனவர்கள் குறித்த அச்சங்கள் ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிராக ஆயுதமேந்திய குடும்ப உறுப்பினர்கள் குறித்த கவலைகள் இவற்றையே உக்ரைனின் சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்கின்றார் பெல்பிரேய்.

விமானக்குண்டுகள் ரொக்கட்களிலிருந்து தப்புவதற்கான பதுங்குழியொன்றிலிருந்த படி குழந்தையொன்று டிஸ்னி பாடல்களை பாடுவதையும் அனைவரும் அனுதாபம் கொள்ளக்கூடிய நிலையில் காணப்பட்டதால் அனைவர் மத்தியிலும் அது உணர்வை கிளறியதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22