முன்னாள் தளபதி சரத்சந்திர கைது : 6 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!

Published By: Robert

24 Nov, 2016 | 10:44 AM
image

இலங்கை கிரிக்­கெட் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணிப்பாளரும் ஓய்­வு­பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் முன்னாள் கட்­டளைத் தள­ப­தி­யு­மான கே.எல்.என். சரத்­சந்­திர நேற்று கைதுசெய்­யப்­பட்டார். 

பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான ஜீப் வண்­டி­யொன்றை தவ­றாக பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­துக்கு நட்டம் ஏற்­ப­டுத்­தினார் எனும் குற்றச் சாட்டிலேயே பொலிஸ் விஷேட விசா­ரணைப் பிரி­வி­னரால் (எஸ்.ஐ.யூ.) அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார். 

1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டம் ஊடாக திருத்­தப்­பட்ட 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 5 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வா­கவும் தண்­டனை சட்டக் கோவையின் விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமை­வா­கவும் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார். இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்­சந்­திர கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இத­னை­ய­டுத்து அவரை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­தர்வு பிறப்­பித்தார்.

 முன்னாள் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யான ஓய்­வு­பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்­சந்­திர, அப்­ப­த­வியில் இருந்து ஓய்­வு­பெற்ற பின்­னரும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் ஜீப் வண்­டி­யான டப்­ளியூ.பி.ஜி.பி 5548 எனும்  ஜீப் வண்­டியை தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­துக்கு நட்டம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தற்­போ­தைய அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஊடாக பொலிஸ் விஷேட விசா­ரணைப் பிரிவில் முறையிடப்பட்டது. இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் விஷேட விசா­ரணைப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மெவன் சில்­வாவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக அப்­பி­ரிவின் 4 ஆம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர்  ஜோர்ஜ் கஹந்­தவின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன.

இது­வரை முன்­னெ­டுக்­கப்பட்­டுள்ள விசா­ர­ணை­களில் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யாக இருந்த சரச் சந்­திர 2011.3.19 அன்று பொலிஸ் சேவையில் இருந்து ஓய்­வு­பெற்­றுள்ளார். அதன்­பின்னர் அவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு தொடர்­பி­லான  இணைப்புச் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார்.

 இந் நிலையில் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்­வு­பெற்ற சரத்­சந்­திர, 2015.08.21 ஆம் திகதி வரை பொலிஸ் அதி­ர­டிப்­ப­டைக்கு சொந்­த­மான டளியூ.பி.ஜி.பி. 5548 எனும் ஜீப் வண்­டியைபயன்­ப­டுத்­தி­யுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் பாது­க­பபு அமைச்சின் அனு­ம­தியை அவர் பெற்றி­ருந்­தாரா என்­பது தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இந் நிலையில் மேற்­படி ஜீப் வண்­டியை சரத்­சந்­திர 123 சந்­தர்ப்­பங்­களில் தனது சொந்த தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது. அதன்­படி அந்த 123 சந்­தர்ப்­பங்­க­ளிலும் மொத்­த­மாக 8085 கிலோ மீற்­றர்கள் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அந்த ஜீப் பய­ணித்­துள்­ளமை விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது. 1478 லீற்றர் எரி­பொருள் விரயம் செய்­யப்பட்­டுள்­ளது. இந்த எரி­பொ­ரு­ளா­னது பொலிஸ் போக்கு வரத்து பிரி­வி­ன­ரா­லேயே வழங்­கப்பட்­டுள்­ளது. அப்­போது எரி­பொருள் லீற்றர் ஒன்று 95 ரூபா 19 சதம் எனும் விலை­யி­லேயே பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரி­வி­னரால் பெறப்பட்­டுள்­ளது. அதன்­படி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்­சந்­திர ஒரு இலட்­சத்து 40 ஆயி­ரத்து 690 ரூபா அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்தி­யுள்­ள­தாக இது வரை விசா­ர­ணை­களில் உறுதி­யா­கி­யுள்­ளன. அதன்­ப­டியே அவ­ருக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) அத்தியாயத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 386,389,392 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் சட்டப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் பீ அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் சந்திரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38