பாதுகாப்பு படைத்தரப்பின் ஆதரவின்றி போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Published By: Vishnu

19 Oct, 2022 | 09:40 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பாதுகாப்பு படைத் தரப்பின் ஆதரவு இன்றி போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற முடியாது பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்ட போதைப்பொருள் வியாபார தொடர்பில் அரசாங்கம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நீதி அமைச்சின் 5 திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் போதைப்பொருள் பாவனை மிகவும் சாதாரண விடயமாகிவிட்டது. இதனை தடுப்பதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஆராய வேண்டும். போதைப் பொருள் பாவனையால் நாங்கள் பின்தள்ளப்படும் நிலைக்கு செல்லலாம். இளைஞர் யுவதிகளிடம் மாத்திரம் அன்றி பாடசாலை மாணவர்களிடையும் பரவியுள்ளன. 

வெளியாகும் செய்திகளில் இது தொடர்பான விடயஙகளை அவதானிக்கலாம். மாணவர்களிடையே கலாச்சார சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதற்கு பிரதான காரணமாக போதைப் பொருள் பாவனை உள்ளது.

நாங்கள் ஓரிடத்திற்கு செல்லும் போது, அதற்கு முன்னரே அங்கு செல்லும் புலனாய்வுத் துறையினர். அங்கு நாங்கள் ஏன் வருகின்றோம் என்ற தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். அது அவர்களின் கடமையாக இருக்கலாம். 

இவ்வாறு புலனாய்வுத் துறை இயங்கும் போது ஏன் போதைப் பொருள் வியாபாரத்தை இலங்கை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

போதைப் பொருள் விடயத்தில் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா? அல்லது படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போது மன்னாரில் அதிகளவில் போதைப் பொருள் பிடிபடுகின்றது. இந்நிலையில் எந்தவொரு படைத் தரப்பின் ஆதரவு இன்றி போதைப் பொருள் வியாபாரத்தை செய்ய முடியாது. 

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் இவர்களில் எவரேனும் ஒரு தரப்பின் அனுசரணை இன்றி போதைப் பொருள் வியாபாரம் நடக்க முடியாது. அல்லது அரசியல்வாதிகளின் செல்வாக்கும் உள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் ஏன் கணக்கில் எடுக்காது இருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36