இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம். இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்து போட்டியில் சம்பாதித்த பணம் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா 'பெஷன் டிசைனராக' உள்ளார். இவரும் அதிக அளவில் சம்பாதித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருடைய நடப்பாண்டு வருமானம் 65 மில்லியன் பவுண்ட்கள் ஆகும். இலங்கை மதிப்பில் இது சுமார் 1360 கோடி ரூபா.டேவிட் பெக்காமின் காலணி தயாரிப்பு நிறுவனம் மூலம் 14.1 மில்லியன் பவுண்டும், 34.1 மில்லியன் பவுண்டுகள் விக்டோரியாவின் பேஷன் பிராண்ட் மூலமும், 17.2 மில்லியன் பவுண்டும் டேவிட் பெக்காமின் உரிமம் மற்றும் வருமானம் மூலமும் கிடைத்துள்ளன.