க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியாகும் - கல்வி அமைச்சர்

Published By: Digital Desk 5

18 Oct, 2022 | 05:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடை க்கான  நேரத்தின் போது இரத்தினபுரி மாவட்ட எம்,பி காமினி வலேகொட எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

காமினி வலேகொட எம்.பி. தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாத நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதால் பெறு பேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த மாணவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி இருப்பதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இதன் உண்மை நிலை என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில்  சிக்கல் உள்ளதாக பரீட்சை திணைக்களம் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை.

எனினும் தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில் அந்த மாணவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலேயே அந்த பரீட்சை நடைபெற்றது.

அதன் போது அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் புகைப்படம் ஒன்றை சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் உறுதிப்படுத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தவித தடையும் இன்றி உரிய காலத்தில் பெறுபேறுகள்  வெளியிடப்படும்.

அதேவேளை சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கு தற்போதுள்ள சட்டத்தில் இடமில்லாத காரணத்தினால் எதிர்காலத்தில் சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02