நகைக்கடைக்காரர் மீது தாக்குதல் - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Vishnu

18 Oct, 2022 | 03:04 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை சந்தைப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் நகைக்கடக்காரர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாங்கேணி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்படி நகைக்கடையில் இரு தங்க நகையினை வெவ்வேறாக அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அதில் ஒரு நகையினை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக கிடைக்கும் பணத்தினை செலுத்தி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினமன்று (17) மீதிகுதியாக செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தியபின்னர் நகையினை கையளிக்குமாறு கேட்டபோது நகைக்கடக்காரர் திரும்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி பின்னர் கைக்கோடாரியால் நகைக்கடைக்காரர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பட்ட கட்ட விசாரணையின்போது பொலிசாரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்டவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார்.

பொலிசார் இன்று (18) சந்தேக நபரை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46