(எம்.எப்.எம்.பஸீர்)

தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும், போதைப்பொருள் சந்தேக நபர்களையும் தேடி கொழும்பின் தோட்டப் பகுதிகளில் திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி அதன் முதல் கட்ட நடவடிக்கையானது நேற்று மட்டக்குளி, சமித் புர பகுதியில் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.  நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்ப்ட்ட இந்த தேடுதல் வேட்டையில் 10 பேர் வரையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்த தேடுதல் வேட்டையின் போது, போதைப் பொருளினைக் கண்டறிய பயிற்றப்பட்ட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்ப்ட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பின் ஏனைய தோட்டப் பகுதிகளிலும் இவ்வாறான திடீர் தேடுதல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொருப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லயணல் குனதிலகவின் திட்டத்தின் கீழேயே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.