அழகான கால்களுக்கு

Published By: Devika

18 Oct, 2022 | 12:01 PM
image

முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்­களும் பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகளை தெரிவு செய்து அணிய முடியும். 

நல்ல பொலிவான பளபளப்பான கால்களை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். 

பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க: ஒருநாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பிலுள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும், மேலும் கிருமிகள் தங்காது. 

மிருதுவான பாதங்கள் கிடைக்க: தயிரை பாதங்களில் தடவி, ப்ரஷ்ஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும். 

வெடிப்பு மறைய: மருதாணி பவுடருடன் டீத் தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. 

மருதாணி இலையுடன் எலு­மிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும். 

கற்றாழையில் இருக்கும் சதைப் பகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும். 

வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும். 

பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right