பொய்யான முறைப்பாடளித்தமை : துறைமுக நகர கொள்முதல் அதிகாரியான சீன பிரஜையை மன்றில் ஆஜராக உத்தரவு

Published By: Digital Desk 3

18 Oct, 2022 | 09:03 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்றினை உடைத்து, அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக  பொய்யான முறைப்பாட்டினை அளித்ததாக கூறப்படும்  துறைமுக நகரின் கொள்முதல் அதிகாரியான சீன பிரஜை  லி சி ஹூ என்பவரை எதிர்வரும்  நவம்பர் 28 ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா நேற்று (17) உத்தரவிட்டார்.

உண்மையான தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன் வைத்து , பொய் முறைப்பாட்டை வழங்கியதாக, துறைமுக  பொலிசார் நேற்று குறித்த சீன நாட்டவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன் வைத்தனர்.

இதனையடுத்தே,  சைனா ஹாபர் நிறுவனம், கிழக்கு கோபுரம், உலக வர்த்தக மையம் , கொழும்பு 1  எனும் முகவரியைக் கொண்ட  துறைமுக நகரத்தின் கொள்முதல் அதிகாரியான  லி சு ஹூ என்பவரை  இவ்வாறு நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்றினை உடைத்து அதனுள் இருந்த செப்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக குறித்த கொள்முதல் அதிகாரி துறைமுக பொலிஸாருக்கு அண்மையில் முறைப்பாடுச் செய்துள்ளார்.

இது தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

கைவிரல் ரேகை பதிவுகள்,  மோப்ப நாய்களை பயன்படுத்தி பொலிஸார் முதல்கட்டமாக விசாரணைகளை முன்னெடுத்ததாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மேலதிக விசாரணைகளில்,  அங்கிருந்து எந்த பொருட்களும் களவாடப்படவில்லை என இதன்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரித்த போது, பல மாதங்களாக  கொள்முதல் சமனிலை நடவடிக்கைகளின் போது குறைப்பாடாக இருந்த பொருட்களை திருடப்பட்டுள்ளதாக கூறி முறைப்பாடளித்து அதனூடாக கணக்காவணங்களை சமனிலை செய்ய குறித்த அதிகாரி முயன்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

அதற்காகவே அவர் பொய்யான முறைப்பாட்டை அளித்துள்ளதாக அவர்கள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்தே  நீதிவான், குறித்த சீன கொள்முதல் அதிகாரிக்கு நீதிமன்றில் ஆஜராக  உத்தரவிட்டார்.

நேற்றைய தினம்  துறைமுக பொலிஸார் சார்பில், உப பொலிஸ் பரிசோதகர்  நிஷாந்த ராஜபக்ஷ நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01