எரிக் சொல்ஹெய்ம் ஊடாக நிதி வந்தால் பரவாயில்லை : பிரிவினைவாதம் வந்து விடக் கூடாது - கம்மன்பில

Published By: Digital Desk 5

17 Oct, 2022 | 05:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் பிரிவினைவாதிகளின் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கவே எரிக் சொல்ஹேய்ம் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிவினைவாதிகளின் நிதி நாட்டுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நிதியுதவி ஊடாக பிரிவினைவாதிகளின் கோரிக்கைளை நிறைவேற்ற கூடாது என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமயவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பெயரளவில் சமாதான தூதுவராக செயற்பட்ட இலங்கைக்காக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை தொடர்பில் இவருக்கு ஒன்றும் தெரியாது.

ஐக்கிய நாடுகள் சுற்று சூழல் தொடர்பான செயற்திட்டத்துக்கு அதிக நிதியுதவி வழங்கும் நோர்வேயின் கோரிக்கைக்கமையவே எரிக் சொல்ஹெய்ம் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் தொடர்பான செயற்திட்ட பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

பிரதானியாக நியமிக்கப்பட்டு 22மாத காலத்துக்குள் இவர் வெளிநாட்டு பயணங்களுக்கு மாத்திரம் 5 இலட்சம் டொலர் வீணடித்துள்ளார்.

சுற்றுச்சூழல் நிபுணர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் பிரதானி பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எரிக் சொல்ஹேய்மிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இவர் எதனடிப்படையில் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

தமிழ் பிரிவினைவாதிகளை அரசாங்கத்துடன் தொடர்புப்படுத்துவதற்காகவே இவர் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்க முடியாது என இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.மறுபுறம் சீனாவுடனான சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்ந்து பிற்போடப்படுவதால் சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.கடன் மறுசீரமைப்புக்கு மாத்திரம் ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.ஐரோப்பின நாடுகளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது.

இவ்வாறான பின்னணியில் தமிழ் பிரிவினைவாதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியுதவி மற்றும் முதலீடுகளை பெற்றுக் கொடுப்பது எரிக் சொல்ஹேய்மின் பிரதான இலக்காக உள்ளது.

பிரிவினைவாதிகளின் நிதி நாட்டுக்குள் வருவதற்கு எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது,ஆனால் பிரிவினைவாதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம்.

இலங்கை மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்ட கல்லூரி பரீட்சைக்கு தோற்றும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது. ஏனைய நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

சட்டக் கல்லூரியில் ஆங்கில மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதன் தர்க்கம் என்ன ஆகவே ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56