ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று  வெளியிடப்பட்டுள்ளது. 

சிக்காகோ நகரைச் சேர்ந்த நிகோலி மக்டொனால்ட்டுக்கு 14 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஜேடன் மற்றும் அனியஸ் என்ற குறித்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி வேறு பிரிப்பதற்கான 27 மணி நேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு கடந்த 5 வாரங்களாக வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து தற்போது அந்தக் குழந்தைகள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் முதன் முதலாக பார்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை கிடைத்தவேளையினை புகைப்படம் எடுத்துள்ளனர்.

குறித்த புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.