புதிய வரி அறவீட்டு முறைகளால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் - அஜித் பி பெரேரா

Published By: Digital Desk 5

16 Oct, 2022 | 03:24 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த வரி அறவீட்டு முறைகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிள் முதலீடுகளையும் இழக்க நேரிடும்.

எனவே அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

எனினும் அது நியாயமானதாகக் காணப்பட வேண்டும். தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள வரி நியாயமற்றதாககும். இவ்வாறு பாரியளவில் வரி அறவிடப்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தர மாட்டார்கள்.

எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தேர்தல் தொடர்பில் திடீரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டுள்ளார். உண்மையில் அவரது நோக்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்பதல்ல. தேர்தலை காலம் தாழ்த்துவதற்காகவே அவர் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

மக்கள் தற்போது முழுமையாக புதியதொரு பாராளுமன்றத்தையே கோருகின்றனர். எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை மீறும் வகையில் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படக் கூடாது.

அரசியலமைப்பில் காணப்படும் எந்தவொரு விடயத்தையும் மாற்றுவதானால் அதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமைகள் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அவர் அதனை விடுத்து தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்று சர்வன வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாகக் கூறுகின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் செலவே சர்வசன வாக்கெடுப்பினை நடத்துவதற்கும் எடுக்கும். எனவே சர்வன வாக்கெடுப்பிற்கு பதிலாக தேர்தலை நடத்துவதே பொறுத்தமானதாக இருக்கும். திருகோணமலை துறைமுகத்தை விற்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவையும் விற்பதற்கு திட்டமிட்டுள்ளார். சிறிகொத்தா அவரது தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு உரித்துடையது. எனவே அவரால் அதனை விற்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38