Image result for சிறுத்தையின் சடலம் virakesari

ஹட்டன் - நுவரெலிய பிரதான பாதையில் மல்லியப்பு பிரதேசத்தில் நேற்று மாலை வாகனம் ஒன்றில் மோதி உயிரிழந்த சிறுத்தையின் சடலம் காணமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் வனவிலங்கு அதிகாரிகள் உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இதேவேளை, வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இனந்தெரியாத சிலர் அதனை கொண்டு சென்றுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு மேலதிகமாக ஹட்டன் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Logesh