செயற்கை இனிப்புகள் ஆபத்தானதா ?

Published By: Digital Desk 5

15 Oct, 2022 | 10:29 AM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் டைப் 2 சக்கரை நோயாளிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள் சர்க்கரையை சிறிதும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரித்திருப்பார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு இனிப்பு சுவைக்கான மாற்றாக செயற்கை இனிப்புகள் அறிமுகமாகி இருக்கிறது. அத்துடன் இவை இயற்கையான இனிப்பு சத்துடன் ஒப்பிடும்போது கலோரி குறைவு என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அதனால் எம்மில் பலரும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகிறார்கள். இது ஆபத்தானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய சூழலில் சந்தையில் எளிதாக கிடைக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நொறுக்கு தீனிகள், உணவு பொருட்கள், துரித உணவுகள் என பலவற்றில் சுவைக்காக செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன.

நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பாண் மற்றும் பற்பசையிலும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் எம்முடைய ஆரோக்கியங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து ஏதுமில்லாத செயற்கை இனிப்பு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் சாக்ரீன், ஸ்டீவியா, சைக்லமெட், சுக்ரோஸ், அஸ்பார்டேம் என பல்வேறு செயற்கை இனிப்புகள் கிடைக்கிறது.

இவற்றை தொடர்ச்சியாக பாவிப்பதால் நாட்பட்ட சிறுநீரக நோய், டைப் 2 சர்க்கரை நோய், நரம்பியல் கோளாறுகள், ஹோர்மோன் கோளாறுகள், நினைவுத்திறன் பாதிப்பு, திடீரென உடல் எடை அதிகரிப்பு..

போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இத்தகைய செயற்கை இனிப்புகளால் பாரிய ஆபத்து உண்டாகிறது.

குறிப்பாக செயற்கை இனிப்புகளை தொடர்ச்சியாக பாவிப்பவர்களுக்கு இயற்கையான இனிப்புகளை பாவிப்பவர்களை காட்டிலும், 13 சதவீதம் கூடுதலாக புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவது ஆபத்தானது என மருத்துவர் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் அனந்த கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29